sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தேர்தல் விதிமீறலை கண்காணிக்க போலீஸ் பறக்கும் படை

/

தேர்தல் விதிமீறலை கண்காணிக்க போலீஸ் பறக்கும் படை

தேர்தல் விதிமீறலை கண்காணிக்க போலீஸ் பறக்கும் படை

தேர்தல் விதிமீறலை கண்காணிக்க போலீஸ் பறக்கும் படை


ADDED : செப் 29, 2011 01:44 AM

Google News

ADDED : செப் 29, 2011 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறுகிறதா என 24 மணி நேரமும் கண்காணிக்க போலீஸ் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.வேட்புமனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.

இதனால் தொண்டர்கள் புடைசூழ கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய உள்ளதால் தேர்தல் விதிமுறைகளை மீற வாய்ப்புள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் ராஜன்செல்லப்பா, மாநகராட்சி கமிஷனரிடம் மனுதாக்கல் செய்தபோது, விதிமுறையை மீறி 30 பேர் அவரது அறையில் இருந்தனர். இதுகுறித்து சர்ச்சை எழுந்தது.சோலையழகுபுரம் 88வது வார்டில் தி.மு.க.,வினர் கட்சி துண்டுகள், சால்வைகள விநியோகித்ததாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல், மற்ற பகுதிகளிலும் பரிசுப்பொருட்கள் வினியோகம் மற்றும் சுவர் விளம்பரங்கள் போன்றவற்றைவற்றை கண்காணிக்க ஒவ்வொரு ஸ்டேஷனில் இரு போலீசாரை கொண்ட மொத்தம் 15 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாக்கிடாக்கியுடன் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் டூவீலரில் ரோந்து வருவர். விதிமீறலை கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பர். இந்த பறக்கும்படை போலீசார் நேற்றிரவு முதல் சுற்றி வருகின்றனர்.










      Dinamalar
      Follow us