sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அனைவரும் விரும்புவது மாற்றம் : பரஞ்ஜோதியார் சொற்பொழிவு

/

அனைவரும் விரும்புவது மாற்றம் : பரஞ்ஜோதியார் சொற்பொழிவு

அனைவரும் விரும்புவது மாற்றம் : பரஞ்ஜோதியார் சொற்பொழிவு

அனைவரும் விரும்புவது மாற்றம் : பரஞ்ஜோதியார் சொற்பொழிவு


ADDED : அக் 03, 2011 01:00 AM

Google News

ADDED : அக் 03, 2011 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''இன்று அனைவரும் விரும்புவது மாற்றம்.

அது தனிமனிதனிடமிருந்து உருவாக வேண்டும்,'' என உலக சமாதான ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் பரஞ்ஜோதியார் பேசினார்.

மதுரையில் முப்பெரும் விழாவில், அவர் பேசியதாவது: குழந்தைகள் பெற்றோரிடம், பெற்றோர் குழந்தைகளிடம், மக்கள் ஆட்சியாளர்களிடம் மாற்றம் விரும்புகின்றனர். தட்டிக்கேட்காத மக்கள் தேவை என, அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். அனைவரும் விரும்பும் மாற்றம் தனிமனிதனிடமிருந்து உருவாக வேண்டும். ஞானம், அரசியல் ஒன்றுபட்டால் உலகம் அமைதியாகும்.

இந்தியா வலிமை பெற்றால் தான், பிற நாடுகளில் அமைதி ஏற்படும். பிறநாடுகள், போருக்குப் பின் சமாதானம் பேசுகின்றன. நாம் சண்டைக்கு முன் சமாதானம் பேசுகிறோம். அமைதி ஒவ்வொருவரின் மனதிலும் உள்ளது. இருப்பதை மறந்து, இல்லாததை தேடுகிறோம். தன்னை உணர்ந்தால் போதும். இன்று சுய அறிவை உருவாக்கும் கல்வி இல்லை, என்றார்.

முன்னதாக மதுரைக்கிளை பொறுப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், தேசிய நீர்வழிச்சாலை மேம்பாட்டு தொழில் நுட்ப தலைவர் ஏ.சி.காமராஜ், லயன்ஸ் துணை ஆளுநர் முருகேசன், முன்னாள் ஆளுநர்கள் நாகராஜன், வேல்சாமி, பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி தலைவர் பாண்டியன், வக்கீல்கள் சங்க தலைவர் தர்மராஜ், தமிழ் இசைச்சங்க அறங்காவலர் மோகன்காந்தி, ஹம்சா ஏர்கூல்ஸ் மற்றும் செண்பகம் ஏர் கண்டிசன்ஸ் இயக்குனர் சீனிவாசன் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us