sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பஸ்ஸ்டாண்ட் விரிவுப்படுத்தப்படும் : மார்க்சிஸ்ட் வேட்பாளர் உறுதி

/

பஸ்ஸ்டாண்ட் விரிவுப்படுத்தப்படும் : மார்க்சிஸ்ட் வேட்பாளர் உறுதி

பஸ்ஸ்டாண்ட் விரிவுப்படுத்தப்படும் : மார்க்சிஸ்ட் வேட்பாளர் உறுதி

பஸ்ஸ்டாண்ட் விரிவுப்படுத்தப்படும் : மார்க்சிஸ்ட் வேட்பாளர் உறுதி


ADDED : அக் 04, 2011 12:44 AM

Google News

ADDED : அக் 04, 2011 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : ''திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம், ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும்,'' என, நகராட்சி தலைவருக்கு தே.மு.தி.க., கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் முத்துக்காளை உறுதி கூறினார்.

அவர் கூறியதாவது: திருமங்கலம் பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தி மதுரையின் தெற்கு நுழைவு வாயிலாக மாற்ற முயற்சி எடுப்பேன். மக்களுக்கு பிறப்பு இறப்பு மற்றும் அனைத்து சான்றிதழ்களும் லஞ்சமின்றி உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலைய ரயில்வே பீடர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். நகர் முழுவதும் மக்கள் பயன்பாட்டுக்குரிய இடங்களில் இலவச கழிப்பறைகள், குளியலறைகள் ஏற்படுத்தி தனித்தனி துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படும். தீப்பெட்டி கம்பெனி அருகில் உள்ள பாலம், பத்திரகாளியம்மன் கோயில் பாலம் உடனடியாக கட்டப்படும். திருமங்கலம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்துவோம். பூங்காக்கள் அமைக்கப்படும். நடை பயிற்சிக்கு இடம் ஒதுக்கப்படும். அண்ணா நகர், மம்சாபுரம் பகுதி சாலைகள் சீரமைக்கப்படும். அனைத்து தெருக்களிலும் சிமென்ட் ரோடுகள், சாக்கடை வசதி செய்து கொடுக்கப்படும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் தினமும் வழங்கப்படும். தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படும். சிலோன்காலனி பகுதியில் குடிநீர் மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்படும், என்றார்.










      Dinamalar
      Follow us