/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அழியும் நிலையில் தாவர, பூச்சி இனங்கள் : வன அலுவலர் பேச்சு
/
அழியும் நிலையில் தாவர, பூச்சி இனங்கள் : வன அலுவலர் பேச்சு
அழியும் நிலையில் தாவர, பூச்சி இனங்கள் : வன அலுவலர் பேச்சு
அழியும் நிலையில் தாவர, பூச்சி இனங்கள் : வன அலுவலர் பேச்சு
ADDED : அக் 09, 2011 01:42 AM
மதுரை : ''உலகில் 3120 தாவர மற்றும் பூச்சி இனங்கள் அழியும் நிலையில் உள்ளன,'' என மதுரை மாவட்ட வன அலுவலர் ராகேஷ் குமார் ஜகானியா கூறினார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வனஉயிரின வார விழா நடந்தது. முதல்வர் (பொறுப்பு) மோகன் தலைமை வகித்தார். பேராசிரியர் ஜோசப் ததேயுஸ் வரவேற்றார். ராகேஷ் குமார் ஜகானியா பேசியதாவது: இந்தியாவில் வனப்பரப்பு 21 சதவீதம். இங்கு 45 ஆயிரம் தாவர இனங்கள், 80 ஆயிரம் விலங்கு மற்றும் பூச்சி இனங்கள் உள்ளன. உலகில் 3120 தாவர மற்றும் பூச்சி இனங்கள் அழியும் நிலையில் உள்ளதாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (ஐ.யு.சி.என்.,) அறிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு, வேட்டையாடுதல், கால்நடைகள் மேய்ச்சலால் வனவளம் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு, புகைத்தலை தவிர்த்தலால் காடுகளை பாதுகாக்கலாம். வனங்களை பாதுகாப்பதில் நம் ஒவ்வொருவரின் கடமை பற்றி அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 51 (ஏ.ஜி.,)ல் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார். நிதிக்காப்பாளர் தவமணி கிறிஸ்டோபர், விலங்கியல் துறை தலைவர் ( பொறுப்பு) ஜெயச்சந்திரா, பேராசிரியர் வெள்ளதுரை பங்கேற்றனர்.

