தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 26, 2026 06:29 PM

ADDED : ஜூலை 26, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 06:29 PM ADDED : ஜூலை 26, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூலை 27

கோயில் * ஆடி பிரம்மோற்ஸவம் - 7ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மஞ்சள் நீராட்டு, புஷ்ப சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளல், மாலை 6:45 மணி, கலை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.

* ஆடி உற்ஸவம்: சந்தனமாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல், மதுரை, அனுப்பானடி தமிழரசியின் கிராமிய நிகழ்ச்சி, இரவு 8:00 மணி.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* கடோபநிஷத் - விளக்கவுரை: நிகழ்த்துபவர் - ஸ்ரீகாந்த், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி * திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் ஸ்ரீனிவாசன், தாளாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: உன்னதி திட்டத்தின் ஸ்ரீலதா, காலை 10:00 மணி, வணிகத்திற்கான ஏ.ஐ., - ஒரு நடைமுறை அணுகுமுறை பயிற்சி: சிறப்பு விருந்தினர் - எம்.பி.ஏ., நிர்வாக டீன் முரளிதரன், காலை 10:00 மணி.

* வெள்ளிவிழா கொண்டாட்டம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி, உசிலம்பட்டி, தலைமை: மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் டீன் ராஜியகொடி, சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை முன்னாள் துணை வேந்தர் தங்கசாமி, மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் பேராசிரியர் பிச்சப்பன், தஞ்சை தமிழ்ப் பல்கலை தொல்லியல் துறை முன்னாள் டீன் ஜெயகுமார், காலை 10:00 மணி.

பொது * மக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:00 மணி.

* மருத்துவ காப்பீட்டு திட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: மண்டலச் செயலாளர் ராமச்சந்திரன், ஏற்பாடு: தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம், மாலை 4:00 மணி.

* இலக்கியத் திருவிழா - 15 நுால்கள் வெளியீடு: தானம் அறக்கட்டளை அலுவலகம், மஹபூப்பாளையம், மதுரை, பங்கேற்பு: எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், காலை 10:00 மணி.

* முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பொதுத் தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: இல்லம் செயலாளர் சீனிவாசன், சிறப்பு விருந்தினர்: துணை கலெக்டர் செல்வன், சமூக நீதி நலம் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி, சிம்மக்கல் முதியோர் இல்லம் மேலாளர் கிரேசியஸ், சேவாலயம் மாணவர் இல்லம் காப்பாளர் கார்த்திகேயன், ஏற்பாடு: அப்துல்கலாம் வழி நண்பர்கள் அமைப்பு தலைவர் செந்தில்குமார், மாலை 6:00 மணி.

மருத்துவம் * உலக மூளை தினத்தை முன்னிட்டு சிறப்பு இலவச பரிசோதனை முகாம்: பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, இலந்தைகுளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

* முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை, விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

கண்காட்சி * அரசு சித்திரைப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us