/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை டாக்டரின் ஆவணப்படம் வெளியீடு
/
மதுரை டாக்டரின் ஆவணப்படம் வெளியீடு
ADDED : டிச 31, 2024 04:49 AM
மதுரை: மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையின் கவுரவத் தலைவர் டாக்டர் நம்பெருமாள்சாமி. இவர் கண்மருத்துவ சேவைக்காக பல அங்கீகாரங்களை பெற்றுள்ளார். விழித்திரை நோய்களுக்கு அதிநவீன 'விட்ரோரெட்டினல்' அறுவை சிகிச்சையை இந்தியாவிற்கு முதன்முதலில் கொண்டு வந்து, லட்சக்கணக்கானோரின் பார்வையை பாதுகாத்துள்ளார்.
இதையடுத்து இந்திய மருந்துத் துறையில் முன்னணி நிறுவனமான மேன்கைண்ட் பார்மா நிறுவனம், தனது தளத்தில் டாக்டர் நம்பெருமாள் சாமியின் மருத்துவ சேவையை பாராட்டி, 'டாக்பிளிக்ஸ் ஓ.டி.டி.,' பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனம் 'ஒயிட் கோட் லெஜண்ட் சீரிஸ்' எனும் தலைப்பில் புகழ்பெற்ற மருத்துவர்களின் வாழ்க்கை, சேவையை ஆவணப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.