/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கதவு தயாரிப்பு கம்பெனி மீது பெட்ரோல் குண்டு வீச்சு போதை ஏற்ற 'பேஸ்ட்' தராததால் ஆத்திரம்

ADDED : ஜூன் 16, 2025 04:15 AM
மதுரை: மதுரையில் போதை ஏற்றுவதற்காக தங்களுக்கு மரக்கதவுகளை ஒட்டும் 'பேஸ்ட்' தராததால் ஆத்திரமுற்ற இருவர் ரெடிமேட் கதவு தயாரிக்கும் கம்பெனி மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
மதுரை அலங்காநல்லுார் ரோட்டில் பனங்காடி செக்போஸ்ட் அருகே செல்வபூமி நகர் உள்ளது. இங்கு டேனியல் என்பவர் ரெடிமேட் மரக்கதவு தயாரிக்கும் கம்பெனி வைத்துள்ளார். கதவுகளுக்கு ஒட்டும் 'பேஸ்ட்' டப்பாக்கள் காலியானதும் அதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இலவசமாக வாங்கிச்செல்வர். சில நாட்களுக்கு முன் இருவர் வந்து கேட்டபோது 'டப்பா காலி இல்லை' என தெரிவித்தனர். இதுதொடர்பாக ஊழியர்கள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த இருவர், பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு கம்பெனி மீது எரிந்தனர். கதவில் பட்ட பாட்டில், முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு வேனின் பின்புற டயரில் பட்டு எரிந்தது. இதுதொடர்பாக கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: டேனியல் கம்பெனியில் அடிக்கடி சிலர் வந்து சரக்கில் கலக்க தண்ணீர் வாங்குவது, கிளாஸ் வாங்குவது என 'உரிமையுடன்' இருந்துள்ளனர். கதவுகளை ஒட்டும் பேஸ்ட்டின் வாசனையை நுகரும்போது சிலருக்கு அது போதையை தரக்கூடியதாக இருக்கும். அந்த வாசனைக்கு அடிமையான சிலர், பேஸ்ட் ஒட்டியிருக்கும் காலி டப்பாக்களை டேனியல் கம்பெனியில் வாங்கி அதை பயன்படுத்தி வந்துள்ளனர். காலி டப்பா தராத ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசினர். இதுதொடர்பாக சிலரிடம் விசாரித்து வருகிறோம் என்றனர்.