ADDED : ஏப் 08, 2025 04:34 AM
மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை பெய்த மழையால் பைபாஸ் ரோடு உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
அதிகபட்சமாக எழுமலையில் 80.6 மி.மீ., மழை பதிவானது. கள்ளிக்குடியில் 68.4, உசிலம்பட்டி 60, ஏர்போர்ட் 54.6, சோழவந்தான் 51, பெரியபட்டி 38.2, பேரையூர் 36.6, வாடிப்பட்டி 35, கள்ளந்திரி 35, திருமங்கலம் 34.6, மதுரை வடக்கு 33.4, குப்பணம்பட்டி 30, தல்லாகுளம் 26, மேட்டுப்பட்டி 22.4, சிட்டம்பட்டி 20.4, புலிப்பட்டி 18.6, விரகனுார் 14.2, சாத்தையாறு அணை 9, மேலுார் 8.2, தனியாமங்கலத்தில் 5 மி.மீ., மழை பெய்தது. சராசரி மழை 32.6 மி.மீ., பதிவானது.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 113.7 (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 1509 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 493, வெளியேற்றம் 105 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 56.69 அடி (மொத்த உயரம் 71 அடி), நீர் இருப்பு 3000 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 504, வெளியேற்றம் 72 கனஅடி. சாத்தையாறு அணை நீர்மட்டம் 24 அடி (மொத்த உயரம் 29 அடி), நீர் இருப்பு 38.77 மில்லியன் கனஅடி.