/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை குடியிருப்புகள் ஆன்லைனில் திறப்பு
/
மதுரை குடியிருப்புகள் ஆன்லைனில் திறப்பு
ADDED : மார் 09, 2024 07:45 AM

மதுரை : 'மதுரையில் ரூ.112.28 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள், அழகர்கோயிலில் புதிய கட்டடங்களை' சென்னையில் இருந்தவாறு முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
மதுரை மஞ்சள் மேடு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.37.24 கோடியில் 320 அடுக்குமாடி குடியிருப்புகள், டி.ஆர்.ஓ., காலனியில் வீட்டு வசதி வாரியம் மூலம் அரசு அலுவலர்களுக்கு ரூ59.92 கோடியில் 224 வாடகை குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா குடியிருப்பு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்.எல்.ஏ., தளபதி, துணை மேயர் நாகராஜன், மேற்பார்வை பொறியாளர்கள் சுடலைமுத்துக்குமார், பெரியசாமி, செயற்பொறியாளர் ரங்கநாதன், உதவி நிர்வாக பொறியாளர் ஈஸ்வரி, உதவிப்பொறியாளர் மணிபாலன் பங்கேற்றனர்.
அழகர்கோவில்
அழகர்கோவில் கள்ளழகர்கோயிலில் ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட விருந்து மண்டபம், சஷ்டி மண்டபம் உள்ளிட்ட புதிய மண்டபங்கள் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
கள்ளழகர்கோயிலில் ரூ.12.90 கோடியில் கட்டபட்டு வந்த விருந்து மண்டபம், காது குத்து மண்டபம், முடி காணிக்கை செலுத்தும் மண்டபம், ரூ.66 லட்சத்தில் கோட்டை வாசலில் வணிக வளாகம், ரூ.58 லட்சத்தில் சுந்தராசா உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ரூ.98 லட்சத்தில் சோலைமலை முருகன் கோயிலில் சஷ்டி மண்டபம் ஆகிய பணிகள் ஓராண்டாக நடந்தது. இப்பணி முடிந்த நிலையில் நேற்று காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்தார்.
துணைக்கமிஷனர் கலைவாணன், செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி பொறியாளர்கள் சரவணன், கிருஷ்ணன், கண்காணிப்பாளர்கள் பிரதீபா, அருட்செல்வன் பங்கேற்றனர்.

