/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உடல் தான விழிப்புணர்வில் மதுரை அரசு மருத்துவமனை 'டாப் 1': சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் முதலிடம்

ADDED : செப் 20, 2024 05:49 AM

மதுரை : உடல் தான உறுப்புகளை பெறுவதில் மாநில அளவில் மதுரை அரசு மருத்துவமனை 2வது இடத்திலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடத்திலும் உள்ளது.
கடந்த 2012 முதல் இங்கு உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 2012 முதல் 2024 வரை 51 பேரிடம் இருந்து சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. 2017 முதல் 2024 வரை மூளைச்சாவு அடைந்தோரிடம் இருந்து 84 சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக 14 வயது அதிகபட்சமாக 55 வயதினருக்கு இங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
2017, 2018ம் ஆண்டுகளில் தலா ஒரு இதயம் பெறப்பட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2017 முதல் 2024 வரை 17 உடலில் இருந்து தோல் தானம் பெறப்பட்டது. 2009 - 24 வரை 3204 கண்கள் தானமாக பெறப்பட்டு அதில் 303 பேருக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுவரை 11 கல்லீரல்கள் தானமாக பெறப்பட்டுள்ளது என்கிறார் டீன் செல்வராணி.
அவர் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான எல்லா வசதிகளும் உள்ளது. இதற்காக ரெலா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். பயிற்சி பெற்ற டாக்டர்கள், நர்ஸ்கள் குழுவும் உள்ளது. மூன்று பேர் தானம் பெறுவதற்காக பதிவும் செய்துள்ளனர். நேற்று (செப்.19) மூளைச்சாவு அடைந்த நோயாளியின் கல்லீரலைப் பொருத்த முயற்சித்த போது ஒருவர் வெளியூரில் வேலை பார்ப்பதால் வரமுடியவில்லை. மற்ற இருவருக்கு கிருமித்தொற்று இருப்பதால் டாக்டர்கள் குழு அனுமதி அளிக்கவில்லை. அதிக உடல் உறுப்புகள் தானம் பெற்ற வகையில் மாநில அளவில் மதுரைக்கு 2ம் இடம், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடம் பெற்றதை பாராட்டும் வகையில் செப்.23 ல் விருது வழங்கப்பட உள்ளது என்றார்.