/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனைக்கு தண்ணீர் பத்தல.. பத்தல..: புதிய இணைப்பு வழங்குமா மாநகராட்சி
/
மதுரை அரசு மருத்துவமனைக்கு தண்ணீர் பத்தல.. பத்தல..: புதிய இணைப்பு வழங்குமா மாநகராட்சி
மதுரை அரசு மருத்துவமனைக்கு தண்ணீர் பத்தல.. பத்தல..: புதிய இணைப்பு வழங்குமா மாநகராட்சி
மதுரை அரசு மருத்துவமனைக்கு தண்ணீர் பத்தல.. பத்தல..: புதிய இணைப்பு வழங்குமா மாநகராட்சி
ADDED : ஏப் 24, 2025 05:51 AM

மருத்துவமனை பழைய வளாகத்திற்கு மணலுாரில் இருந்து தெப்பக்குளம் வழியாக மாநகராட்சி குழாய் மூலம் ரூ.1.35 கோடி செலவில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 8 முதல் 10 மணி நேரம் மின்மோட்டார் மூலம் 5 லட்சம் முதல் 7 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் கிடைத்தாலும் பற்றாக்குறையாக உள்ளது.
தற்போது முல்லைப்பெரியாறு மூன்றாவது குடிநீர் திட்டத்தின் கீழ் அண்ணா நகரில் உள்ள எஸ்.எம்.பி., காலனி மேல்நிலைத் தொட்டி மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாநகரில் இருந்து மருத்துவமனை வரை தரைப்பகுதியில் குழாய்கள் பதிப்பதற்காக மாநகராட்சிக்கு ரூ.23.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 7 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
இதை மகப்பேறு வார்டின் போர்டிகோ பகுதி தரைத்தள தொட்டியில் சேமிக்க முடியும். இங்கு ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். தண்ணீர் வர வர மின்மோட்டார்கள் மூலம் வார்டுகளுக்கு வினியோகம் செய்யலாம்.ரூ.23.50 லட்சம் செலுத்தி 20 நாட்களாகியும் மாநகராட்சி இதுவரை குழாய் பதிக்கும் பணியை துவங்கவில்லை.
இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடு, கடை, வணிக நிறுவனங்கள், திருமண மகால், மருத்துவமனைகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நீலநிற பைப் இணைக்கப்பட்டு வருகிறது. பனகல் ரோட்டில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மட்டும் புதிய இணைப்பு கொடுக்கவில்லை.
அனைத்து இடங்களுக்கும் இந்த பைப் பொருத்தப்பட்ட பின் பழைய குடிநீர் இணைப்புகள் அகற்றப்பட்டால் பழைய லைன் வழியாக மருத்துவமனைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும் என்கின்றனர் மருத்துவமனை அதிகாரிகள்.
அவர்கள் கூறியதாவது: மாநகராட்சிக்கு மருத்துவமனை மூலம் இதுவரை ரூ.13 கோடி வரை தண்ணீருக்காக வழங்கப்பட்டுள்ளது. அதிக தொகை செலுத்திய வகையில் மருத்துவமனைக்கு மட்டும் நீலநிற பைப் லைன் இணைக்கவில்லை. தண்ணீரின்றி ஒரு மணி நேரம் கூட மருத்துவமனை செயல்பட முடியாது.
தாமதமின்றி குழாய் பதிக்கும் வேலையை மாநகராட்சி துவங்க வேண்டும். பழைய வளாகம், அரசு மருத்துவக் கல்லுாரி, தீவிர விபத்து பிரிவு மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு நான்கு புதிய இணைப்புகளை வழங்க வேண்டும் என்றனர்.