/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி; மதுரைக்கு கிடைத்த பெருமை
/
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி; மதுரைக்கு கிடைத்த பெருமை
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி; மதுரைக்கு கிடைத்த பெருமை
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சி; மதுரைக்கு கிடைத்த பெருமை
ADDED : ஆக 07, 2025 06:55 AM

மதுரை: திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக மதுரையை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் துாய்மையான நகரங்களின் பட்டியலை சமீபத்தில் இந்த அமைச்சகம் வெளியிட்டது. அதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளில் மதுரைக்கு கடைசி இடம் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்வேயில் பல்வேறு முரண்பாடுகளும், கேள்விகளும், எதிர்ப்பும் எழுந்தன. இந்நிலையில் திடீரென்று திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகராட்சியாக மதுரையை இந்த அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நகர்நலப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுக்க தேர்வு செய்யப்படும் நகரங்களில் மத்திய தரக் குழு ஆய்வு செய்து வருகிறது. எந்த நகரங்களின் நகராட்சிகள் பொதுக் கழிப்பறைக் கட்டி, சுத்தத்தை பராமரிக்கிறதோ, அந்த நகரத்தில் இந்த ஆய்வுக்குழு நேரில் சென்று ஆய்வு செய்து துாய்மை மாநகராட்சியாக அறிவிக்கின்றது.
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் இதுபோன்று அறிவிக்கப்படுகிறது.