/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கால்நடை கணக்கெடுப்பு துவக்கம்
/
மதுரை கால்நடை கணக்கெடுப்பு துவக்கம்
ADDED : அக் 25, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை கணக்கெடுப்பு பணி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று (அக்.25) துவங்குகிறது.
மதுரை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையைச் சேர்ந்த உதவி டாக்டர்கள், கால்நடை ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் 287 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேசிய அளவில் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நான்கு மாதங்கள் செயல்படுத்தப்படும்.
பொதுமக்கள் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, வாத்து, பன்றி குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். முதற்கட்டமாக இன்று (அக்.25) காலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானையில் இருந்து கணக்கெடுப்பு பணி துவங்குகிறது.