sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை மாடக்குளம் மடைகளை பாதுகாக்கணும்; செல்லுார் போல் தத்தளிக்காமல் தடுக்கணும்

/

மதுரை மாடக்குளம் மடைகளை பாதுகாக்கணும்; செல்லுார் போல் தத்தளிக்காமல் தடுக்கணும்

மதுரை மாடக்குளம் மடைகளை பாதுகாக்கணும்; செல்லுார் போல் தத்தளிக்காமல் தடுக்கணும்

மதுரை மாடக்குளம் மடைகளை பாதுகாக்கணும்; செல்லுார் போல் தத்தளிக்காமல் தடுக்கணும்


ADDED : டிச 25, 2024 06:37 AM

Google News

ADDED : டிச 25, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாய் முழு கொள்ளளவும் நிரம்பி மறுகால் பாயும் நிலையில் மூன்று மடைகளும் ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் அவசர காலத்திற்கு தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது.

14 அடி ஆழத்தில் 3400 மீட்டர் நீளத்துடன் கூடிய மாடக்குளம் கண்மாய் 167 மில்லியன் கனஅடி கொள்ளளவில் நிறைந்து காணப்படுகிறது. கண்மாய்க்கான நேரடி வாய்க்கால் மூலம் 500 ஏக்கர், கண்மாய் மூலம் 400 ஏக்கர் விவசாயம் தற்போதும் நடக்கிறது.

கண்மாய்க்கு கொடிமங்கலம் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை மூலம் 12.5 கி.மீ., நீள கால்வாய் வழியாக தண்ணீர் வரத்து கிடைக்கிறது. மேலும் தென்கால், புதுக்குளம், வடிவேல்கரை, விளாச்சேரி கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாயும் போதும் நிலையூர் கால்வாயில் உள்ள 12 நேரடி மடைகள் வழியாகவும் உபரிநீர், பாசனத்தின் தேவைபோக மீதமுள்ள கழிவுநீர் மாடக்குளத்தில் சேருகிறது.

மடைகளே பிரதானம்


கண்மாயில் நீர் நிரம்பினால் மறுகால் வழியாக மட்டுமின்றி அவசரத் தேவைக்கு மடைகள் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்படும். இங்கே மூன்று மடைகள் வழியாக தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது. முதல் மடையில் இருந்து பொன்மேனி வழியாக கிருதுமால் கால்வாயில் உபரிநீர் செல்லும் வழியில் ஆக்கிரமிப்பு உள்ளது. நடுமடையில் இருந்து துரைசாமி நகர் வழியாக கிருதுமாலில் கலக்கும் பகுதியில் மூன்று சர்வே எண்களில் பட்டா நிலத்தின் வழியாக கால்வாய் செல்வதால் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது. 3வது மடை பைபாஸ் ரோடு வழியாக கிருதுமாலில் சேர வேண்டும். இங்கும் கால்வாய் சுருக்கப்பட்டு முழுமையான ரோடாக மாற்றப்பட்டதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கண்மாயும், கரையும் பலப்படுத்தப்பட்டுள்ளதால் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் பயமில்லை என்றாலும் திடீரென பெருமழை பெய்தாலோ விநாடிக்கு 500 அடிக்கு மேல் நீர்வரத்து கிடைத்தாலோ கண்மாய் நீர் ஊருக்குள் பாய்வதற்கான அபாயம் உள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணமாக செல்லுார் கண்மாய்க்கான வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததை சொல்லலாம் என்கின்றனர் நீர்வளத்துறை அதிகாரிகள். அவர்கள் கூறியதாவது:

முதல் மடையின் கடைசி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றினால் போதும். 2வது மடையில் பட்டா நிலத்து கால்வாயை மீட்டால் தண்ணீர் தடையின்றி செல்ல முடியும். 3வது மடைக்கான பை பாஸ் ரோட்டில் 'கட் அண்ட் கவர்' சேனல் அமைக்கலாம். தற்போது செல்லுார் கண்மாய்க்கான 'கட் அண்ட் கவர்' சேனல் குலமங்கலம் ரோட்டில் அமைக்கப்படுகிறது. ரோட்டின் அடியில் கான்கிரீட் சுவர் எழுப்பி தண்ணீர் செல்வதற்கும் மேலே கான்கிரீட் பாதை அமைத்து வாகனங்கள் செல்வதற்கும் வழி செய்தால் மாடக்குளம் கண்மாயும் அப்பகுதியும் நிரந்தரமாக பாதுகாக்கப்படும். ஏனென்றால் பாசனத்துக்கு மட்டுமின்றி எஸ்.எஸ்.காலனி முதல் எல்லீஸ்நகர் வரை ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கான நீராதாரமாக கண்மாய் உள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us