/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மானகிரி கண்மாய் ஆக்கிரமிப்பு 2 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு
/
மதுரை மானகிரி கண்மாய் ஆக்கிரமிப்பு 2 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு
மதுரை மானகிரி கண்மாய் ஆக்கிரமிப்பு 2 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு
மதுரை மானகிரி கண்மாய் ஆக்கிரமிப்பு 2 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு
ADDED : நவ 04, 2025 04:22 AM
சென்னை:  மதுரை மானகிரி கண்மாயில் உள்ள சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை, இரண்டு மாதங்களில் அகற்ற, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், மானகிரி கண்மாயில், வக்ப் வாரியத்திற்கு கல்லுாரி கட்டுவதற்காக, 1969ல் தமிழக அரசு, 28 ஏக்கர் நிலத்தை வழங்கி யது. அந்நிலத்தை அளந்து பார்த்தபோது, 20 ஏக்கர் மட்டுமே இருந்தது. மீதமுள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், அவற்றை அகற்ற, அரசு நடவடிக்கை எடுத்தது.
இதை எதிர்த்து, ஹசீனா, கனகமணி உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 1995ல் வழக்கு தொடர்ந்தனர். இதில், நீர்நிலை, வாய்க்கால் மற்றும் மானகிரி கண்மாய் புறம்போக்கு நிலம் என்பது தெரியவந்ததால், ஆக்கிர மிப்பை அகற்ற, தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, மனுதாரர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், 'மானகிரி கண்மாய் புறம்போக்கில் பலர் ஆக்கிரமித்துள்ளனர். வக்ப் வாரியம் நடத்தும் கல்லுாரியும், சட்ட கல்லுாரியும் செயல்பட்டு வருகிறது. எனவே, மனுதாரர் களுக்கு அந்த இடத்திற்கான பட்டா வழங்க வேண்டும்' என வாதிட்டனர்.
அரசு தரப்பில், 'நீர் நிலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஆக்கிரமிப்பாளர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு வீட்டுவசதி வாரியத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இடம் தர அரசு தயாராக உள்ளது' என கூறப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மதுரை, ராஜாக்கூர் வீட்டுவசதி திட்டத்திலும், கருத்தம்புளியம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டுவசதி திட்டத்திலும் வீடுகள் காலியாக உள்ளன. இதில் மனுதாரர்களில் தகுதிவாய்ந்த ஏழை களுக்கு மாற்று இடம் தர வேண்டும். நீர்நிலை களை பாதுகாப்பது மிக முக்கியம். இல்லை யெனில், மழை காலத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும். எனவே, மானகிரி கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை, இரண்டு மாதங்களுக்குள் அகற்ற வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

