/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்
/
கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்
ADDED : நவ 04, 2025 04:21 AM
மதுரை:  மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கிறது. இதையொட்டி தமுக்கம் சந்திப்பில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்பு செல்லும் வழித்தடத்தில் இடதுபக்க சாலை மூடப்பட்டு, தற்போது வலது  பக்க சாலை மட்டும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதில் தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் இந்த வலதுபக்க சாலையில் கட்டுமான பணிகள் நடக்க உள்ளது.இதனால் அழகர்கோவில் சாலையில் இருந்து, கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும், தமுக்கம் சந்திப்பில் இருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடதுபக்க சாலையை பயன்படுத்தி கோரிப்பாளையம் சந்திப்பு சென்று வழக்கமான வழித்தடத்தில் செல்லும் வகையில் வழிசெய்யப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

