
56 பவுன் தங்க நகை மோசடி
மதுரை: தெற்காவணி மூலவீதியில் நகை வியாபாரம் செய்பவர் சதீஷ்குமார் 38. இவரிடம் அப்பகுதி நகை கடை உரிமையாளர் தட்சிணாமூர்த்தி 77, மகன் நவநீதகிருஷ்ணன் 38, ஆகியோர் நகை வாங்கி வியாபாரம் செய்தனர். கடந்த ஆக.22ல் 15 நாட்களில் பணம் கொடுத்துவிடுவதாக கூறி 56 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கி மோசடி செய்தனர். இதுதொடர்பாக நவநீதகிருஷ்ணனை தெற்குவாசல் இன்ஸ்பெக்டர் ரெஜினா கைது செய்தார்.
கேபிள் திருடிய மூவர் கைது
மதுரை: மானாமதுரை முருகன் கோயில் அருகே ரயில்வே காலனியில் உள்ள சரக்கு அறையில், மூன்று பேர் சிக்னல் கேபிள்களைதிருடுவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., சம்பத்குமார் தலைமையிலான ஆர்.பி.எப்., போலீசார் சென்று மானாமதுரை மூங்கிலுாரணி நவநீத கிருஷ்ணன் 22, கிருஷ்ணராஜபுரம் உதயராகவன் 19, மேலக்கரை 17 வயது சிறுவனைகைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரத்து 797 மதிப்புள்ள 43.17 மீ., காப்பர் கேபிள்களை பறிமுதல் செய்தனர்.
ஒருவர் பலி
கொட்டாம்பட்டி : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வண்ணா இருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் 50. வடை மாஸ்டரான இவர் நேற்று மதியம் நாகமங்கலத்தில் இருந்து கொட்டாம்பட்டிக்கு டூவீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. ரூத் நகர் நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் சென்ற போது மதுரை- -- திருச்சி நோக்கி சென்ற லாரி மோதி இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கிறார்.

