ADDED : பிப் 09, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஐந்தாண்டுகளுக்கு பின் இரண்டுநாள் பயணமாக மாதா அமிர்தானந்தமயி பிப்.13ல் மதுரை வருகிறார்.
மக்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இவர், 45 ஆண்டுகளுக்கும் மேல் உலகெங்கும் பயணித்து ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அன்பு நிறைந்த அரவணைப்பால் மக்கள் மனதில் தன்னம்பிக்கை, பக்தி, ஆன்மிக விழிப்புணர்வு, மனத்துாய்மை ஆகியவற்றை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் மதுரை பிரம்மஸ்தான கோயில் 30ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பிப். 13ல் பசுமலையில் உள்ள தன் மடத்திற்கு மாதா அமிர்தானந்தமயி வருகிறார். காலை 11:00 மணி முதல் பிப்.13,14ல் அவரது சத்சங்கம், பஜனை, தியானம், தரிசன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

