/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உயர கட்டுப்பாட்டால் கைவிடப்படும் மேம்பாலம் நான்கு வழிச்சாலையாகும் விமான நிலைய ரோடு
/
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உயர கட்டுப்பாட்டால் கைவிடப்படும் மேம்பாலம் நான்கு வழிச்சாலையாகும் விமான நிலைய ரோடு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உயர கட்டுப்பாட்டால் கைவிடப்படும் மேம்பாலம் நான்கு வழிச்சாலையாகும் விமான நிலைய ரோடு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உயர கட்டுப்பாட்டால் கைவிடப்படும் மேம்பாலம் நான்கு வழிச்சாலையாகும் விமான நிலைய ரோடு
ADDED : பிப் 19, 2024 05:48 AM
மதுரை : மதுரை கீழ வெளி வீதியில் நெல்பேட்டை - விமான நிலையம் ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசு ஒப்புதல் வழங்கியது. மீனாட்சி அம்மன் கோயில் உயரக்கட்டுப்பாட்டு காரணமாக இந்த ரோட்டில் அமைய இருந்த மேம்பாலம் கைவிடப்படுகிறது.
நெல்பேட்டையிலிருந்து தெற்கு வெளி வீதி, வில்லாபுரம், அவனியாபுரம் வழியாக விமான நிலையம் செல்லும் ரோட்டை 4 வழிச்சாலையாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்காக சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அதிகமுள்ள வில்லாபுரம் பகுதியில் அவற்றை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த ரோட்டில் அவனியாபுரம் பைபாஸ் ரோடு துவக்கம் முதல் விமான நிலையம் வரை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. நகருக்குள் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டனர். இதை தவிர்க்க நெல்பேட்டை முதல் அவனியாபுரம் பைபாஸ் ரோடு வரை மேம்பாலம் அமைக்க ஆய்வு, மதிப்பீடு செய்யப்பட்டது.
தற்போது இந்த மேம்பாலம் அமைய வாய்ப்பில்லை என அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மதுரை நகருக்குள் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி ஒரு கி.மீ.,க்குள் உயரமான கட்டடங்கள் அமையக் கூடாது என்ற விதி உள்ளது.
கோயிலின் பழமை, பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு இந்த உயர கட்டுப்பாடு உள்ளது.
அதனால்தான் மெட்ரோ ரயில் போக்குவரத்தும் வசந்தநகர், மேலவெளிவீதி, வடக்கு வெளிவீதி, சிம்மக்கல், வைகை நதி, கோரிப்பாளையம் பகுதிகளில் சுரங்கப்பாதையில் அமைய உள்ளது.
அதேபோல கீழவெளிவீதியிலும் உயரமான மேம்பாலம் அமைய தடை உள்ளதால் தற்போதுள்ள ரோட்டை 4 வழிச்சாலையாக அகலப்படுத்த முடிவு எடுத்துள்ளனர். தற்போதுள்ள ரோடு 65 அடி ரோடாக விரிவுபடுத்தப்படும்.
அதற்கு தேவையான இடம் இருபுறமும் கையகப்படுத்தப்படும்.
தெற்கு வெளிவீதியை தாண்டி அருப்புக்கோட்டை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் குறுகலாக உள்ளது. இப்பாலத்தையொட்டி மற்றொரு பாலம் அமைக்கப்படவுள்ளது.
இப்பாலத்திற்கு உயரகட்டுப்பாடு விதி பொருந்தாது என்பதால் இதற்கு விலக்கு உண்டு. அங்கிருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு வரை 4 வழிச்சாலையாக ரோடு மாற்றப்பட உள்ளது.

