ADDED : ஜூலை 28, 2011 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி ஒன்றியம் கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார
நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி
விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு
நடந்த கருத்தரங்கிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சண்முக பெருமாள்
தலைமையேற்றார். வட்டார விரிவாக்க கல்வியாளர் சந்திரலேகா குடும்ப
கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். ஏராளமான
கர்ப்பிணிகள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.