ADDED : ஜூலை 31, 2011 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி:உசிலம்பட்டி பயணியர் விடுதியில் தமிழ்நாடு நலிவுற்ற கிராமிய
கலைஞர்கள் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் மொக்கையன் தலைமை வகித்தார்.
செயலாளர் பால்ராஜ், பொருளாளர் தவசி மற்றும் கிராமியக் கலைஞர்கள் கலந்து
கொண்டனர். உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கதிரவன், பார்வர்டு பிளாக் மாவட்டச்
செயலாளர் அல்லிக்கொடி, கிராமிய கலைஞர் குழு ரத்தினம் ஆகியோர் சிறப்புரை
வழங்கினர்.கிராமிய கலைஞர்களுக்கு ஓய்வூதியம், பஸ் பாஸ், இலவசமாக
இசைக்கருவிகள் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றினர்.