/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கைதிகளின் குழந்தைகளுக்கு இலவச நோட்டு
/
கைதிகளின் குழந்தைகளுக்கு இலவச நோட்டு
ADDED : ஆக 01, 2011 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை அபோடு இல்லத்தில் சிறை கைதிகளின் குழந்தைகள் தங்கிப்
படிக்கின்றனர். பள்ளிகளில் படிக்கும் இவர்களுக்கு வீரமாமுனிவர் இலக்கிய
பேரவை சார்பில் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.இதற்கான விழாவிற்கு
ஆசிரியர் ஜான்பெலிக்ஸ் கென்னடி தலைமை வகித்தார். செஞ்சிலுவை சங்க ஆலோசகர்
ஜெ.எம்.இக்பால், மதுரை கல்லூரி வாரிய உறுப்பினர் இல.அமுதன் முன்னிலை
வகித்தனர். இந்திய வக்கீல் சங்க செயலாளர் சாமித் துரை மாணவர்களுக்கு இலவச
கற்றல் உபகரணங்களை வழங்கினார். டாக்டர் சுதர்சன், சத்துணவு அமைப்பு
நிர்வாகிகள் பிரபாகரன், பாலசுப்ரமணியன், சமூகசேவகர் பாபு பங்கேற்றனர். இல்ல
நிறுவனர் இருதயராஜ் நன்றி கூறினார்.