sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

"சூரிய ஒளியில் தெருவிளக்குகள் வசதி

/

"சூரிய ஒளியில் தெருவிளக்குகள் வசதி

"சூரிய ஒளியில் தெருவிளக்குகள் வசதி

"சூரிய ஒளியில் தெருவிளக்குகள் வசதி


ADDED : ஆக 05, 2011 02:32 AM

Google News

ADDED : ஆக 05, 2011 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:தமிழகத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க, சூரிய ஒளியில் தெருவிளக்கு வசதிக்கு, பட்ஜெட்டில் ரூ.248 கோடி ரூபாய் ஒதுக்கியது வரவேற்பை

பெற்றுள்ளது.பட்ஜெட் குறித்து மக்கள் கருத்து:நாகேந்திரன், அப்பள கம்பெனி உரிமையாளர், அண்ணாநகர், மதுரை: காவிரி நதியின் குறுக்கே ரூ.32 கோடி மதிப்பில் புதிதாக அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பல மாவட்டங்களில் குடிநீர் தேவை பூர்த்தியாகும். நதிநீர் இணைப்புக்கு முன்னுரிமை கொடுத்தது வரவேற்கத்தக்கது. கடலோர பாதைகளை மேம்படுத்தும் அறிவிப்பும் பாராட்டுக்குரியது. கிருஷ்ணன், ஓய்வு பெற்ற தாசில்தார், துரைச்சாமிநகர், மதுரை: மின் பற்றாக்

குறையை சமாளிக்க சூரிய ஒளியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்துவது வரவேற்கத்தக்கது. தெருவிளக்கு மட்டுமல்லாது பிற தேவைகளுக்கும் சூரிய ஒளி மூலம் நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். லஞ்சம், ஊழலை ஒழிக்க மாநில அரசு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். விலைவாசி உயர்வால் ஏழைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.உமா, துணை இயக்குனர், வேளாண்மைதுறை, மதுரை: பால் விலை உயர்வை கட்டுப்படுத்திட கால்நடைகளை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்திற்கு ரூ.135 கோடி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. நெல்லையில் கால்நடை மருத்துவ கல்லூரி துவங்குவது பாராட்டுக்குரியது. மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி போன்ற பொருட்கள் வழங்கும் திட்டத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது. ரத்தினவேல், தனியார் நிதிநிறுவன அலுவலர், காமராஜர் சாலை, மதுரை: இலவச கால்நடைகள் வழங்கும் திட்டத்தில் ஜெர்சி போன்ற நோய் எதிர்ப்பு குறைந்த பசுக்களை வழங்குவதை விட, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த நாட்டு பசுக்களை வழங்க வேண்டும். சூரிய ஒளியில் தெருவிளக்கு வசதியை விரிவாக மேம்

படுத்த வேண்டும். இலவசங்கள் தேவையற்றது. ரேஷன் கார்டு உள்ளவர் அனைவருக்கும் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்குவது விட வறுமைக் கோட்டில் உள்ளவர்களுக்கு தரமான பொருட்களை வழங்கினால் நல்லது.உணவு பொருள் வியாபாரிகள் சங்கம்: உணவு தானிய சேமிப்பு கிடங்கு அமைக்க ரூ.237 கோடி ஒதுக்கீடு, நதி நீர் இணைப்புக்கு முன்னுரிமை, விவசாய விற்பனை மையங்களை நவீனப்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு, வணிக வரித்துறை முழுமையாக கம்ப்யூட்டர்மயமாக்கம், வேலை வாய்ப்பில் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சதவீத இடஒதுக்கீடு, வட்டார அளவில் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆதரவு இல்லங்கள், சுய தொழில் துவங்க உதவி தொகையை ரூ.7.5 லட்சமாக உயர்த்தியது போன்றவை வரவேற்கத்தக்கன. உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக அமைக்கப்படும் வாரியத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உணவு எண்ணெய்க்கு வரி விலக்கு வரம்பு ரூ.500 கோடியாக மீண்டும் உயர்த்த வேண்டும்.தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்: சமுதாயத்தின் ஒவ்வொரு சாரருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட சலுகைகள், நலத்திட்டங்கள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை பரிசீலித்து ஆக்கப்பூர்வ பட்ஜெட்டை சமர்ப்பித்ததை மக்கள் வரவேற்பர். குறு, சிறு, நடுத்தர தொழில் துறையின் வளர்ச்சிக்கு திட்டங்களை அறிவித்த முதல்வருக்கு நன்றி. சிறு, குறு தொழில்களுக்கு மூன்று சதவீத தள்ளுபடி வட்டியில் கடன் வழங்குவது, ஐம்பது புதிய சிறு தொழில் தொகுப்புகள் உருவாக்குவது பாராட்டுக்குரியது. தொழில் துறைக்கான கட்டமைப்பை மேம்படுத்த முதல்வர் தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் உருவாக்குவது தொழில் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். நதி நீர் இணைப்பு திட்டத்தின் மூலம் வைகை நதி ஜீவநதியாக மாறும். ஆக., 1 தொழில் வணிக துறையினருடன் நடந்த பட்ஜெட் முன் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட வரிசலுகைகள், வரி சீர்திருத்தங்கள் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.






      Dinamalar
      Follow us