/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பல்கலை மையமாக செயல்பட்டடில்லி நிறுவனத்திற்கு அனுமதி ரத்து
/
பல்கலை மையமாக செயல்பட்டடில்லி நிறுவனத்திற்கு அனுமதி ரத்து
பல்கலை மையமாக செயல்பட்டடில்லி நிறுவனத்திற்கு அனுமதி ரத்து
பல்கலை மையமாக செயல்பட்டடில்லி நிறுவனத்திற்கு அனுமதி ரத்து
ADDED : ஆக 05, 2011 02:39 AM
மதுரை:நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை தொலை தொடர்பு கல்வி மையமாக
டில்லி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து
செய்ததற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.டில்லி மேலாண்மை
மற்றும் ஆராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் தாக்கல் செய்த ரிட் மனு:நெல்லை
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை தொலை கல்வி மையமாக எங்கள் நிறுவனம்
செயல்பட்டது.
திடீரென இந்த அனுமதியை தமிழக உயர்கல்வி துறை முதன்மை
செயலாளர், பல்கலை தொலை தொடர்பு கல்வி இயக்குனர் ரத்து செய்தனர். இது
குறித்து நிறுவனத்திடம் எந்த விளக்கமும் பெறவில்லை. முதன்மை செயலாளர்,
இயக்குனர் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை இடைக்கால தடை
விதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள்
கே.சாமிதுரை, ஞானகுருநாதன் ஆஜராயினர்.நீதிபதி எஸ்.மணிக்குமார், மனுதாரர்
நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
விசாரணையை தள்ளிவைத்தார்.