sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தமுக்கத்தில் நடக்கிறது தினமலர் "ஷாப்பிங்' கண்காட்சி

/

தமுக்கத்தில் நடக்கிறது தினமலர் "ஷாப்பிங்' கண்காட்சி

தமுக்கத்தில் நடக்கிறது தினமலர் "ஷாப்பிங்' கண்காட்சி

தமுக்கத்தில் நடக்கிறது தினமலர் "ஷாப்பிங்' கண்காட்சி


ADDED : ஆக 06, 2011 03:45 AM

Google News

ADDED : ஆக 06, 2011 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வீட்டு உபயோகப் பொருட்களை பார்க்கவும், வாங்கவும் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.இல்லை என்ற வார்த்தையே இல்லை எனக்கூறும் அளவுக்கு ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. சந்தையில் சமீபத்தில் அறிமுகம் ஆன பொருட்கள் கூட, கண்காட்சியில் இடம்பெற்றிருப்பதால் அலைச்சல் இன்றி, ஒரே இடத்தில் பார்க்கலாம். மனதுக்கு பிடிப்பதை வாங்கலாம்.முகமா... நிலவா: அழகு முகத்தை இன்னும் அழகாக்கும் மும்பை, டில்லி அழகுசாதனப் பொருட்கள் ஏராளம்.

கூந்தலை பட்டுபோல பளபளப்பாக மின்ன வைக்கும் ஷாம்பூ வகைகள், உடலைத் தழுவும் வண்ண ஆடைகள், ஆடைக்கேற்ற அணிமணிகள் அத்தனையும் தாராளமாக கிடைக்கின்றன. ஆண்கள் வருத்தப்பட வேண்டாம். உங்களை ஹீரோவாக காட்டும் பல மில் ரகங்களின் பேன்ட், சட்டைகள், பெல்ட், ஷாக்ஸ், காலணிகள்,

இருதய வடிவ கைக்கடிகாரங்கள் உள்ளன. சணலில் வண்ண வண்ண போலோ பேக், ஸ்போர்ட் பேக், புரூட்டி மினி, ரைடர் பேக்

உள்ளிட்ட பல்வேறு சணல் பேக்குகள் பார்ப்போரை கவர்கின்றன.போவோமா ஊர்கோலம்: இளஞ்ஜோடிகள் வெளிமாநிலம், வெளிநாடு சென்று உல்லாசமாக

சுற்ற வேண்டுமா... குடும்பத்துடன் இயற்கை காட்சிகளை ரசிக்க வேண்டுமா... சலுகை கட்டணத்தில் இங்கே பதிவு செய்யலாம். இன்டர்நெட் வசதியுடன் கூடிய கையடக்க லேப்டாப், தண்ணீர் இல்லாமல் ஜில்லென்ற காற்று வீசும் ஏர்கூலர், மலைகளில் தவழ்ந்து வரும் மேகங்களை உருவாக்கும் மின் விசிறி, சுழலும் டேபிள்,

பட்டனைத் தட்டினால் கொசுக்களை 'லபக்' செய்யும் மெஷின், எமர்ஜென்சி விளக்குகள்... சொன்னால் போதுமா? வந்து பார்க்க வேண்டாமா?

பொறிக்க, கொறிக்க: கொஞ்சம் கூட 'ஆயில்' இல்லாமல் 'பாயில்' செய்யும் பாப்கார்ன், அப்பள, வடக மெஷின், சுடச்சுட நொறுக்கு தின்பண்டம், காலை, மாலை, இரவு சுவையான மேல்நாட்டு, தமிழகத்து, கிராமத்து உணவு வகைகள், ஊட்டி உலர் பழங்கள், முந்திரி, பாதாம் பருப்பு வகைகள், சிங்கப்பூர், மலேசிய

சாக்லேட், பிஸ்கட்... இன்னும் என்ன வேண்டும்? ஆயிரம் தலை பார்ப்பது அபூர்வம் என்பர். இங்கே கண்காட்சியில் பல்லாயிரம் தலைகளைப் பார்த்து

ஆச்சர்யப்படலாம், வாருங்கள்... ஜில்லென்ற குளிரூட்டத்தில் வியர்க்காமல் 'ஷாப்பிங்' செய்யலாம்.சந்தியுங்கள் சாகச கலைஞர்களை; கண்காட்சியில் தினமும் வெளி மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் பிரமிக்க வைக்கும் சாகச நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 4.30, 5.30, 6.30, 7.30, 8.30 மணிகளில் இந்நிகழ்ச்சி நடக்கும்.

கண்காட்சி நேரம்குடும்பம் குடும்பமாக, மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் இக்கண்காட்சி ஆக., 8ம் தேதி வரை, காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு நுழைவு கட்டணம் 30 ரூபாய்.

'திரில்' தரும் திகில் மாளிகைதிக்...திக்...திக்... என, மார் தட்டி, மீசையை முறுக்கி, சவால் விடும் வீராதி வீரர்களைக் கூட, திடுக்கிட வைக்கும், திகில் மாளிகை கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள திகில் மாளிகைக்குள் நுழைவோர், அஞ்சாமல் வெளியே வந்தால் ஆச்சரியம்.அப்படித்தான் நேற்று காலை ஒரு போலீஸ்காரர், 'நாங்க பார்க்காத பயங்கரமா? சுத்த சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு'' என சவால் விட்டபடி யூனிபார்மில், திகில் மாளிகைக்குள் வீராப்புடன் நுழைந்தார். உள்ளே என்ன நடந்ததோ தெரியவில்லை. போன வேகத்தில், வெளியே வந்து விழுந்தார். வியர்வையில் நனைந்ததால், யூனிபார்ம் தொப்பலோ தொப்பல். விரைத்திருந்த மீசை, தொங்கி இருந்தது. மனிதர், அக்கம் பக்கம் யாரும் பார்க்கிறார்களா என நோட்டமிட்டபடி, 'மீசையில் மண் ஒட்டவில்லை' கதையாக, சத்தமே இல்லாமல், இடத்தை காலி செய்தார், பாவம்.

கண்காட்சி பற்றி பெண்கள்

மதுரை:தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி எப்படி இருந்தது என, பெண்களிடம் கேட்டபோது, வார்த்தையை முடிக்கும் முன்னே, 'சூப்பர்... சூப்பர்... சூப்பர்' என சொல்லி அசத்தினார் மதுரை விசாலாட்சிபுரத்தை சேர்ந்த எழில். ''இது தான் முதல் முறை. இனி தொடர்ந்து வருவேன்'' என்றார்.மாரிதேவி, கோமதிபுரம்:''மூன்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறேன். இது தான் நல்லா இருக்கு, என்று எதையும் பிரித்துச் சொல்லமுடியல. அவ்வளவு பிரமாண்டமா இருக்கு'' கீதா, ராஜபாளையம் :

''கணவர், மூன்று பெண் குழந்தைகளுடன் இங்கு வந்தேன். நிறைய சமையலறை சாதனங்கள்... வியப்பாக இருக்கிறது. பிள்ளைகள் தான் வாட்ச், அழகுசாதன பொருட்களை அள்ளினர். தோழிகளுக்கும் சேர்த்து வாங்கினர்''பூர்ணிமாதேவி, கீழப்பனங்காடி: 'டிவி', வாஷிங் மெஷினில் தான் எத்தனை வகை... பார்க்கவே பிரமிப்பா இருக்கு. குழந்தைகளுக்கான பொருள் எத்தனைனு எண்ணவே முடியல. மொத்தத்தில் சூப்பருங்க''.மீனா, மதுரை: ''கண்காட்சியை முதன்முதலில் துவங்கியதிலிருந்து இன்றுவரை வருகிறேன். இங்கு வந்து பொருட்களை பார்ப்பதிலும், வாங்குவதிலும் தனி சந்தோஷம். வீட்டு உபயோகப் பொருட்களை இங்கே சலுகை விலையில் வாங்க

முடிகிறது''

சகலமும் கிடைக்கும் நளபாகம்

மதுரை:தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி ஸ்டால்களை சுற்றி சுற்றிப் பார்த்து, ஆசை தீர 'ஷாப்பிங்' செய்த, அலுப்புடன் வருவோரின் பசியை ஆற்ற, வரிசையாக கேன்டீன்கள், அணி வகுத்து நிற்கின்றன. இந்தியாவின் அனத்து மாநில சுவைகளையும் இங்கு நீங்கள் அறியலாம். பிரபலமான திண்டுக்கல் வேணு பிரியாணி, திரும்ப திரும்ப கேட்க தூண்டும் கேரள புட்டு, ஆப்பம் வகைகள், எவ்வளவு சாப்பிட்டாலும் ஆசை தீராத ஆந்திர வெரைட்டி சாதங்கள், காணக்கிடைக்காத கிராமிய உணவு வகைகள், சூப்கள், பசியை போக்கும் பர்கர், நூடுல்ஸ்கள், வட இந்திய வகைகளான கட்லட், பேல் பூரி, பாணி பூரி, சாட் வகைகள், மாக்டெய்ல் எனப்படும் வித்தியாசமான ஜூஸ் வகைகள், சுடச்சுட பாப்கார்ன், ஐஸ் கிரீம் வகைகள் உங்களது நாக்கை ஆனந்த்தின் எல்லைக்கே அழைத்துச் செல்ல காத்திருக்கின்றன.

பலூன்... மறந்திடாதீங்க...

மதுரை:தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியில் குட்டீஸ்களே... குறிபார்த்து சுடும் உங்களின் திறமைக்கு ஒரு சவால். எதிரே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பலூன்களை சிறிய அம்பால் சுட்டு வீழ்த்த வேண்டும். அடுக்கி வைத்துள்ள தகர டின்களை ஒரே பந்தில் வீழ்த்தி விட்டால் நீங்கள் தான் சாம்பியன். உங்களின் இலக்கை சோதிக்க, பந்தை சரியான பானைக்குள் போட வேண்டும். எல்லாம் செய்தாச்சா... போகும் போது மறக்காம, இலவச பலூன் வாங்கிட்டு போங்க.

ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கத்திற்கு தடை

மதுரை:விருதுநகர் மாவட்டத்தில் மூன்று ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி தலைவர் கோவிந்தன், ராமதேவன்பட்டி ஊராட்சி தலைவர் சீதாலட்சுமி மற்றும் ஆலங்குளம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி. இவர்களை பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கலெக்டர் பதவி நீக்கம்

செய்தார். அதை எதிர்த்து மூவரும் ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். பதவி நீக்கத்திற்கு நீதிபதி ஆர்.சுதாகர் இடைக்கால தடை விதித்தார். மனு குறித்து பதிலளிக்கவும் கலெக்டர் உட்பட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆல்ப்ஸ் மலை அதிசய ஹீரோ

மதுரை:மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று, ஆல்ப்ஸ் மலையின் அதிசய ஹீரோ.சும்மா கொழு கொழுனு, புசுபுசுனு குண்டுப் பையன் (நாய்க்குட்டி தாங்க) கண்காட்சிக்குள் உலா வருவது ஆச்சர்யம். இந்த பத்து மாத குழந்தையின் எடை மட்டும் 72 கிலோ. வளர்ந்தால் 120 கிலோ இருப்பான். ஆல்ப்ஸ் மலைக்குச் சென்றால், இவனை நம்பி பனிக்குள் புதைந்து விடலாம். அகலமான பாதத்தால் பனியைத் தோண்டி எடுப்பதோடு நாக்கால் நம் முகத்தை நக்கி, சூடேற்றி உயிர் கொடுப்பான். ஆடையை கவ்வி இழுத்தாவது காப்பாற்றுவான். இந்த ராஜா வீட்டு கன்னுக்குட்டியை, நன்றாக கவனிக்காவிட்டால் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பான். வெயில் இவனுக்கு ஒத்துக்காது என்பதால் தனியாக மின்விசிறியும், ஏர்கூலரும் வைத்துஉள்ளனர். விலையும் கொஞ்சம் தான்... ஒன்றரை லட்சம் ரூபாய். இன்னொருவனை பார்த்தால் நாயா... மானா... என சந்தேகமாக இருக்கும். மெக்ஸிகோவின் சுவாவா நாய். சிறு மான்குட்டி போல மருண்டு பார்க்கிறது. வளர்ந்தாலும் இப்படித் தான் இருக்குமாம். நன்கு குரைப்பான் என்பதால், வீட்டில் வளர்க்கலாம். விலை 10 ஆயிரம் ரூபாய்.நம்மாளுங்க மட்டும் சளைத்தவங்களா... ராஜஸ்தான், மகாராஷ்டிராவின் பிரபல 'கேரவன் ஹவுண்ட்'ஐ (8000 ரூபாய்) பார்த்தால், பலநாள் பட்டினி கிடந்தது போல தோற்றம். ஆனா வேட்டையாடுவதில் இவனை மிஞ்ச ஆளில்லை. நீண்ட கால்களும், கூர்மையான முகமும் இவனது பலம்.

அப்புறம்... நியூ பவுன்லாந்தின் லாப்ரடார் நாய், ஜெர்மனியின் ராய் வெய்லர் என நிறைய ரகங்களும், அதன் குட்டிகளும் உள்ளன. நம்ம வீட்டு குட்டீஸ்களுக்கும், பெரியவர்களுக்கும் இந்த நாய் கண்காட்சி ரொம்பவே பிடிக்கும். ஒருதரம் வந்து பாருங்க...

உங்களை ஈர்க்கும் எலக்ட்ரானிக் சிட்டி

மதுரை:தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியில் 'எலக்ட்ரானிக் சிட்டி' என சொல்லும் வகையில், கண்காட்சி அமைந்திருக்கிறது. 3டி எல்.சி.டி., கலர் 'டிவி', டி.டி.எச்., டி.வி.டி., கேமரா, பிளேயர், கம்ப்யூட்டர்கள், 'சிடி', வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உட்பட மிகப்பெரிய ÷ஷாரூம்களில் விற்கப்படும் அத்தனை எலக்ட்ரானிக் பொருட்களும் உள்ளன. பட்ஜெட்டுக்கும், தேவைக்கும் ஏற்றபடி ஒப்பிட்டு வாங்கலாம்.சமையலறை சக்ரவர்த்தி: எலக்ட்ரிக் குக்கர், நான்ஸ்டிக் அயிட்டங்கள், மைக்ரோவேவ் ஓவன், மிக்ஸி, டேபிள் டாப் கிரைண்டர்,சப்பாத்தி மேக்கர், ஜூஸர், பிங்கர் சிப்சுக்காக உருளைக்கிழங்கு வெட்டும் கருவி, தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் கருவிகளும் குவிந்துள்ளன. அலங்கார கட்டில்கள், பர்னிச்சர்கள், சோபா செட், மெத்தை விரிப்புகள், திரைகள், தரை விரிப்பு, தோரணங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தமாக வாங்கினால் அதிகபட்ச தள்ளுபடி உண்டு. சமையலறை பொருட்கள் வாங்கினால், சில ஸ்டால்களில் இலவச பரிசுப் பொருள் தருகின்றனர்.பதப்படுத்தாத பேரீச்சை: இளமஞ்சள் நிறத்தில் கடித்து சாப்பிடும் வகையில் பதப்படுத்தாத பேரீச்சை இங்குள்ளது. கொத்து கொத்தாக காய்த்த நிலையில் தேவைக்கேற்ப பறித்து எடை போடலாம். பேரீச்சை மரக்கன்றுகளும் வாங்கிச் செல்லலாம்.






      Dinamalar
      Follow us