ADDED : ஆக 06, 2011 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை முத்துப்பட்டியை சேர்ந்தவர் பகவதி பாஸ்கரன்,19.
நாகமலையில்
உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ., மாணவர். நண்பர் நாகராஜன்,24; கொத்தனார்.
இருவரும் நேற்று மாலை 6.30 மணிக்கு ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில்
(ஹெல்மெட் அணியவில்லை) செக்கானூரணி அருகே புளியங்குளம் ரோட்டில் சென்றபோது,
உசிலம்பட்டியிலிருந்து வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தனர். மதுரை அரசு
மருத்துவமனையில் இரவு 10.15 க்கு இருவரும் இறந்தனர். செக்கானூரணி போலீசார்
விசாரிக்கின்றனர்.