sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆவின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் பெயரளவுக்கு நடந்த இயக்குனர் ஆய்வு

/

ஆவின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் பெயரளவுக்கு நடந்த இயக்குனர் ஆய்வு

ஆவின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் பெயரளவுக்கு நடந்த இயக்குனர் ஆய்வு

ஆவின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் பெயரளவுக்கு நடந்த இயக்குனர் ஆய்வு


ADDED : ஆக 06, 2011 03:49 AM

Google News

ADDED : ஆக 06, 2011 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை ஆவின் மூலம் பால் வினியோகத்தை அதிகரிப்பது உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து நடந்த மேலாண்மை இயக்குனர் மோகன் ஆய்வு பெயரளவுக்கு முடிந்ததால், ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் ஏமாற்றமடைந்தனர். மதுரையில் ஆவின் மூலம் 1.90 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது 1.35 லிட்டர் மட்டும் விற்பனையாகிறது. தினமும் இரண்டு லட்சம் லிட்டர் பால் வரத்து இருந்தும், 60 ஆயிரம் லிட்டர் பால் சென்னைக்கு செல்வதால், மதுரையில் தட்டுப்பாடு

நிலவுகிறது. இதை காரணம் காட்டி, ஆவின் பூத்களில் முறையான பால் வினியோகம் நடப்பதில்லை. தனியார் பாக்கெட் பால் விற்பனைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஆவின் செயல்பாடுகள் இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர். ஆவினின் பிற தயாரிப்புகளான நெய், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர்

உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகள் குறித்து ஜூலை 26ல் மதுரையில் மேலாண்மை இயக்குனர் மோகன் ஆவின் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். சென்னைக்கு பால் அனுப்புவதால் ஆகும் கூடுதல் செலவு, மதுரையில் நிலவும் தட்டுப்பாடு, சொசைட்டிகளின் அழிவு குறித்து, ஊழியர் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது ஊழியர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆய்வின்போது, பொதுமக்கள் கருத்தை கேட்க, ஏற்பாடுகள் செய்யவில்லை. 'வந்தோம்... சென்றோம்...' என்ற ரீதியில் ஆவினில் ஆய்வு முடிந்தது. ஆய்வுக்கு பின், பால் தட்டுபாடு நீங்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆவின் பூத்துகளை ஒழுங்குபடுத்தி, உள்ளூர் தேவைக்கு முன்னுரிமை கொடுத்தால் மட்டும் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும்.






      Dinamalar
      Follow us