/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சமணர் படுகையில் கல்குவாரி கண்டித்து உண்ணாவிரதம்
/
சமணர் படுகையில் கல்குவாரி கண்டித்து உண்ணாவிரதம்
ADDED : ஆக 11, 2011 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அருகே அரிட்டாபட்டி மலையில் சமணர் படுகை, குகைக்கோயில்கள் உள்ளன.
இதில் கல்குவாரி நடத்த அரசு அனுமதித்தது. குவாரி அமைக்க நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கக்கோரி, அரிட்டாபட்டி மக்கள் மற்றும் ஏழுமலை பாதுகாப்பு சங்கம் சார்பில் மதுரையில் உண்ணாவிரதம் நடந்தது. தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். இந்து ஆலயப் பாதுகாப்புக்குழு மாநில தலைவர் நரசிம்மாச்சாரி துவக்கி வைத்தார். அரசு நடவடிக்கை எடுக்காவிடில் மலை மீது அமர்ந்து தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. வி.எச்.பி., மாவட்ட தலைவர் சின்மயா சோமசுந்தரம், இந்து மகாசபை மாவட்டத் தலைவர் செல்லத்துரை பங்கேற்றனர்.