/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நகரில் இந்தாண்டு 126 விநாயகர் சிலைகள் ஊர்வலம் 36 கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம்
/
நகரில் இந்தாண்டு 126 விநாயகர் சிலைகள் ஊர்வலம் 36 கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம்
நகரில் இந்தாண்டு 126 விநாயகர் சிலைகள் ஊர்வலம் 36 கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம்
நகரில் இந்தாண்டு 126 விநாயகர் சிலைகள் ஊர்வலம் 36 கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம்
ADDED : ஆக 17, 2011 02:46 AM
மதுரை : செப்.,1 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை நகரில் இந்தாண்டு
மூன்று நாட்கள் மொத்தம் 126 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடக்கிறது. இதற்காக
36 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. செப்.,1ல் சிவசேனா, செப்.,2ல்
இந்து மக்கள் கட்சி, செப்.,3ல் இந்து முன்னணி சார்பில் 126 விநாயகர்
சிலைகளின் ஊர்வலம் நடக்கிறது. மாசிவீதிகள் வழியாக கொண்டு வரப்பட்டு,
யானைக்கல் பகுதியில் வைகையாற்றில் கரைக்கப்படுகிறது. இதற்காக இந்து முன்னணி
சார்பில் மூன்றடி முதல் 11 அடி வரையுள்ள 108 விநாயகர் சிலைகள், சிந்தாமணி
ரிங் ரோடு பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுப்படாத
வகையில் பேப்பர் மோல்டு, தேங்காய் நார், உருளை கிழங்கு மாவினால் இச்சிலைகளை
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கலைஞர்கள் தயாரித்துள்ளனர்.கடந்தாண்டை போல்
இந்தாண்டும் ஊர்வலத்திற்கும், சிலை வைப்பதற்கும் போலீசார் 36
கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளனர். சிலை வைத்திருக்கும் இடத்தின்
உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும். சிலை பாதுகாப்பு
கமிட்டி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள்
தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒலிபெருக்கிகளை தினமும் இரண்டு மணி
நேரம் மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஊர்வலத்தின்போது கலர் பொடி தூவக்கூடாது.
பட்டாசு வெடிக்கக்கூடாது. அனுமதி பெறாத சிலைகளை ஊர்வலத்தில் கொண்டு
வரக்கூடாது. சிலைகளை எந்த வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது என்பது
முன்கூட்டியே போலீசிற்கு தெரிவிக்க வேண்டும் உட்பட 36 கட்டுப்பாடுகள்
விதிக்கப்படவுள்ளது.
தங்கம் விலை உயர்கிறது
மதுரை : அட்சய திருதியை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன், தங்கம் விலை
புதிய உச்சத்தை (ஒரு கிராம் ரூ.2250) தொட்டு சாதனை படைத்தது. இதன் பிறகு
விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டதற்குமாறாக, தொடர்ந்து விலை
அதிகரித்தது. இருப்பினும் விற்பனை சூடுபிடித்தது.கடந்தவாரம் ஆக.,10ல் ஒரு
கிராம் ரூ.2418க்கு விற்கப்பட்டது. ஆக.,11ல் ரூ.2479ஆக உயர்ந்து, 12ல்
ரூ.2442 ஆக குறைந்தது. ஆக.,13ல் ரூ.20 குறைந்து ரூ.2422க்கு விற்கப்பட்டது.
ஆக., 14,15 விடுமுறை என்பதால் விலையில் மாற்றமில்லை. நேற்று ரூ.17
அதிகரித்து ரூ.2439க்கு விற்கப்பட்டது.