sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அன்னா ஹசாரேவுக்கு மதுரையில் ஆதரவு பெருகுகிறது

/

அன்னா ஹசாரேவுக்கு மதுரையில் ஆதரவு பெருகுகிறது

அன்னா ஹசாரேவுக்கு மதுரையில் ஆதரவு பெருகுகிறது

அன்னா ஹசாரேவுக்கு மதுரையில் ஆதரவு பெருகுகிறது


ADDED : ஆக 24, 2011 01:19 AM

Google News

ADDED : ஆக 24, 2011 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:ஊழலுக்கு எதிராக போராடும் சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மதுரையில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.

தமுக்கம் மைதானத்தில் நேற்று தென்னிந்திய நுகர்வோர், மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊழலை ஒழிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாநில தலைவர் மணவாளன் தலைமை வகித்தார். பொது செயலாளர் சிங்கராஜ் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் சாகுல் அமீது வரவேற்றார். நிர்வாகிகள் சரவணன், சதீஷ்குமார், பாலசந்தர்,மாதவன், சிக்கந்தர் கலந்து கொண்டனர். ஆடு, நாய் மற்றும் கோழி கழுத்தில் தொங்க விடப்பட்ட அட்டையில், ''நாங்கள் உண்ணும் உணவிலும் ஊழல்,'' என குறிப்பிட்டனர். பின் தியாகிகள் ஸ்தூபி அருகே கோஷங்களை எழுப்பினர். ஊழலுக்கு எதிரான வலிமையான லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும். பிரதமர், நீதிபதிகளையும் ஊழல் சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செல்லூர் 50 அடி ரோட்டில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., பார்வர்ட் பிளாக் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.பி., மாநில செயலாளர் பசும்பொன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் நகர் செயலாளர் விக்ரமன், இந்திய கம்யூ., நகர் செயலாளர் பொறுப்பு மயிலேறி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊழலை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.ஸ்காட் ரோடு தலைமை தபால் அலுவலகம் அருகே ஊழலுக்குஎதிரான இந்திய இயக்கம், ஈஷா பவுன்டேஷன், பாரத்சுபிமான் டிரஸ்ட், கல்லூரி மாணவர் கழகம் சார்பில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் நிர்வாகிகள் பாலாஜி, வள்ளியம்மை, தீபக்பார்மர், சர்மா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us