sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிறிது சிறிதாக கரைந்து வரும் வண்டியூர் கண்மாய்

/

சிறிது சிறிதாக கரைந்து வரும் வண்டியூர் கண்மாய்

சிறிது சிறிதாக கரைந்து வரும் வண்டியூர் கண்மாய்

சிறிது சிறிதாக கரைந்து வரும் வண்டியூர் கண்மாய்


ADDED : ஆக 29, 2011 12:11 AM

Google News

ADDED : ஆக 29, 2011 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையின் மிகப்பெரிய நீராதாரமான வண்டியூர் கண்மாய், பாழ்படுவதால் சுற்றுப்புறச்சூழல், நிலத்தடிநீர் பாதிக்கப்படுகிறது.தமிழகத்தின் மிகப்பெரிய கண்மாய்களின் பட்டியலில் மதுரை மாவட்டம் குன்னத்தூர், நிலையூர், தென்கால், தென்கரை பெரியகுளம், வண்டியூர் பெரியகுளம் கண்மாய்கள் இடம் பெற்றுள்ளன.

இவற்றில் 3 மில்லியன் கனமீட்டர் தண்ணீர் தேக்க முடியும். இவை தான் மதுரைக்கு மிகப்பெரிய நீராதாரமாக உள்ளன.வண்டியூர் கண்மாய்க்கு சாத்தையாறு அணையில் வெள்ளநீர் போக்கி மூலம் வெளியேறும் உபரிதண்ணீர் ஓடை வழியாக வருகிறது. பாளையம்பட்டி கண்மாயில் இருந்து வரும் ஈச்சனோடையும், பெரியாறு பிரதான கால்வாயின் 9வது மடையில் இருந்து வரும் தண்ணீரும் வருகிறது. பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள இக் கண்மாயை பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாக மாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து துவங்கிய படகு சவாரி, பாதுகாப்பு குறைவால் நிறுத்தப்பட்டன. இங்கு வனத்துறை சார்பில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் முயற்சியும் கைவிடப்பட்டுவிட்டது.கண்மாய்கரைப் பகுதிகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது போன்று, நீர்பிடிப்பு பகுதிகளும் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் நீர் வளமும் கெட்டுள்ளது. கண்மாய் கரைகளில் கழிவுகள் கொட்டப்படுவதுடன், கழிவுநீரும் சேர்கிறது. கண்மாயில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க முடியாத நிலை உருவானதால், அங்கு விளையாட்டு மைதானங்கள் மற்றும் காங்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டு கண்மாய் சிறிது சிறிதாக கரைந்து வருகிறது.வைகை வடகரைப் பகுதியில் நிலத்தடிநீரின் முதுகெலும்பாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அரணாகவும் உள்ள வண்டியூர் கண்மாயின் ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி, நீராதாரத்தை நிரந்தரப்படுத்தும் முயற்சியில் பொதுப்பணித்துறை, மாநகராட்சி இணைந்து செயல்பட வேண்டும்.






      Dinamalar
      Follow us