sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் ஏற்படும் மாசு: பாதிக்கப்படும் பொதுமக்கள்

/

மதுரையில் ஏற்படும் மாசு: பாதிக்கப்படும் பொதுமக்கள்

மதுரையில் ஏற்படும் மாசு: பாதிக்கப்படும் பொதுமக்கள்

மதுரையில் ஏற்படும் மாசு: பாதிக்கப்படும் பொதுமக்கள்


ADDED : ஆக 29, 2011 12:13 AM

Google News

ADDED : ஆக 29, 2011 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை ரோடுகளில் மணல் குவியல், வாகனங்களின் புகை மற்றும் இரைச்சலால் உடல், மனநலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.மதுரையில் எந்த இடத்திலும் ரோடுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

ரோட்டின் ஓரங்களில் தேங்கும் மணலை முறையாக அகற்றுவதில்லை. வாகனத்தில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் போது தான் மணலை அகற்றுகின்றனர். மதுரை என்விரோ கேர் அமைப்பின் மூலம் மதுரையில் 8 இடங்களில் காற்று, ஒலிமாசு அளவிடப்பட்டது. அந்த ஆய்வின்படி மதுரை வடக்கில் கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி பகுதிகளில் மூக்கின் வழியாக செல்லும் தூசியும், வாய்க்குள் செல்லும் (10 மைக்ரானுக்கு கீழ்) தூசியும் அதிகம். தொடர்ந்து மூக்கில் தூசி செல்லும் போது ஆஸ்துமா பிரச்னை ஏற்படுகிறது. வாய்க்குள் செல்லும் தூசி நேரடியாக நுரையீரலுக்குள் காற்றுமண்டலத்தை அடைத்து பாதிப்பை தருகிறது. இப்பகுதிகளில் வாகனங்களின் இரைச்சல் காதுகேட்கும் சாதாரண (55 டெலிபல்) அளவை விட அதிகமாக (89.6) இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற பதட்டம், எரிச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து கேட்கும் போது மனநலமும் பாதிக்கப்படுகிறது. காளவாசல், பழங்காநத்தம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், கீழவாசல், தெப்பக்குளம் பகுதிகளில் ஒலி மாசு அதிகமாக உள்ளது. ரோட்டில் பணியாற்றும் போக்குவரத்து போலீசார், வியாபாரிகள், கடை ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ரோட்டோர மணலை வாரம் ஒருமுறை அகற்ற வேண்டும். வாகனங்களில் அதிக சத்தம் தரும் 'ஏர்ஹாரனை' நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us