ADDED : ஆக 29, 2011 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர் : மேலூர் நாவினிப்பட்டி, கருத்தப்புளியம்பட்டி, உறங்கான்பட்டி, கூத்தப்பன்பட்டி, தி.மீனாட்சிபுரம், வெள்ளநாயக்கம்பட்டியில் பார்த்தீனிய செடி ஒழிப்பு முகாம் நடைபெற்றது.
நீர் மேலாண்மை துணை வேளாண் இயக்குநர் காதிரி, உதவி இயக்குநர் கணேசன் தலைமை வகித்தனர். செடிகளை அழித்தல், பயிர் சுழற்சி முறை, பார்த்தீனிய கம்போஸ்ட் தயாரிப்பு, உப்பு நீரை பார்த்தீனிய செடிகளில் தெளித்தல் என செய்முறை விளக்கங்கள் காண்பிக்கப்பட்டது. வேளாண் அலுவலர் கமலாலட்சுமி, துணை அலுவலர் அசோகன் செயல்முறையை விளக்கினர்.