/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இடியும் நிலையில் பைக்காரா காலனி வீடுகள் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
/
இடியும் நிலையில் பைக்காரா காலனி வீடுகள் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
இடியும் நிலையில் பைக்காரா காலனி வீடுகள் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
இடியும் நிலையில் பைக்காரா காலனி வீடுகள் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
ADDED : செப் 06, 2011 01:40 AM
மதுரை : மதுரை மாநகராட்சி 66 வது வார்டுக்கு உட்பட்டது பைக்காரா அரசு தொழிலாளர் காலனியில் 240 வீடுகள் பராமரிப்பின்றி, இடியும் நிலையில் உள்ளன.மதுரையில் செயல்பட்ட மகாலட்சுமி, மீனாட்சி, ஆதிலட்சுமி, ஹார்வி, டி.வி.எஸ்., மில்கள் மற்றும் கூட்டுறவு அச்சக தொழிலாளர்களுக்காக இங்கு 1963 ல் 200 வீடுகளை அரசு கட்டியது.
மேலும் 240 வீடுகள் 1987 ல் கட்டப்பட்டன. மில் தொழிலாளர்களிடம் 1996 வரை பழைய காலனியில் (200 வீடுகள்) தலா மாதம் ரூ.15, புதிய காலனியில் தலா ரூ.52 வாடகை வசூலிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு 1996 ல் அரசு கிரையம் செய்து கொடுத்தது. ஆலைகள் மூடப்பட்டதால், தொழிலாளிகள் வேலையிழந்தனர். பலர் இறந்து விட்டனர். தற்போது வாரிசுகள் இங்கு வசிக்கின்றனர்.
1987ல் கட்டப்பட்ட 240 வீடுகள் பராமரிப்பின்றி இடியும் நிலையில் பயமுறுத்திக் கொண்டுள்ளன. கட்டியதிலிருந்து வீடுகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, தற்போது கழிவு நீர் தேங்கியுள்ளது. பன்றிகள் தொல்லை அதிகம். ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன. கடந்தாண்டு மழைக்காலத்தில், 'சிமென்ட் சிலாப்' இடிந்து விழுந்து, சிறுமி காயமடைந்தார். மழைகாலங்களில், மாநகராட்சி பள்ளிகளில் குடியிருப்பவர்கள், தங்க வைக்கப்படுகின்றனர். குடியிருப்போர் சங்க தலைவர் டிட்டோ குமார்: புதிய காலனி கட்டும்போது மோசமாக இருந்ததால், கான்ட்ராக்டர்கள் கைது செய்யப்பட்டனர். வீடுகள் பராமரிப்பின்றி, இடியும் நிலையில் இருப்பதால், அச்சத்தில் மக்கள் உள்ளனர். 1996 ல் வீட்டுவசதித்துறை அமைச்சர் பிச்சாண்டியிடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய அலுவலகம் மூலம் ரூ.7 கோடியே 77 லட்சம் மதிப்பில் சீரமைக்க பரிந்துரைத்துள்ளனர். லீலா, குடும்பத்தலைவி: மழைகாலங்களில் வீடுகளில், தண்ணீர் வடிகிறது. அப்போது, மாநகராட்சி பள்ளியில் எங்களை தங்க வைக்கின்றனர். குறைந்த வருவாயில் குடும்பம் நடத்தும் எங்களால், அதிக வாடகை கொடுக்க இயலாது.

