sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆரப்பாளையம் கிராஸ் ரோடு சந்திப்பில் விதி மீறும் அரசு பஸ்களால் அவதி

/

ஆரப்பாளையம் கிராஸ் ரோடு சந்திப்பில் விதி மீறும் அரசு பஸ்களால் அவதி

ஆரப்பாளையம் கிராஸ் ரோடு சந்திப்பில் விதி மீறும் அரசு பஸ்களால் அவதி

ஆரப்பாளையம் கிராஸ் ரோடு சந்திப்பில் விதி மீறும் அரசு பஸ்களால் அவதி


ADDED : செப் 07, 2011 02:47 AM

Google News

ADDED : செப் 07, 2011 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு சந்திப்பில், விதிகளை மீறி அரசு டவுன் பஸ்களை எதிரெதிரில் நிறுத்துவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.இங்கு ஆரப்பாளையம் கிராஸ், புட்டுத்தோப்பு, சிவானந்தா ரோடுகள் சந்திக்கின்றன.

ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வரும் அரசு டவுன் பஸ்கள் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் நிற்பதில்லை. நிழற்குடை பயனின்றி உள்ளது. சிவானந்தா ரோட்டிலிருந்து ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள் நிற்க, மணிஷ் பேக்கரி அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை டிரைவர்கள் கண்டுகொள்வதில்லை. பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து நகரின் பிற பகுதிகளுக்குச் செல்ல, சந்திப்பிலுள்ள திருமலை நாயக்கர் சிலையைச் சுற்றி சிவானந்தா ரோட்டிற்கு திரும்ப வேண்டும்.

விதியை மீறி பஸ் ஸ்டாண்ட் மற்றும் சிவானந்தா ரோட்டிலிருந்து வரும் பஸ்களை ஆரப்பாளையம் முதல் தெரு சந்திப்பு வேகத்தடை அருகே எதிர் எதிரே நிறுத்துகின்றனர். விபத்து அபாயத்தை டிரைவர்கள் உணர்வதில்லை. மாநகராட்சி மருத்துவமனை எதிரே காத்திருக்கும் பயணிகள் ரோட்டை கடந்து ஓட்டமும், நடையுமாக பஸ்களில் இடம் பிடிக்க வேண்டியுள்ளது. காலை, மாலையில் பள்ளி மாணவர்கள் பாடு திண்டாட்டம்.மாநகராட்சி மருத்துவமனை எதிரே ரோட்டை அடைத்துக்கொண்டு மின்சார 'டிரான்ஸ்பார்மர்' உள்ளது. ஆபத்தை உணராமல், நிழலுக்கு அங்கு பயணிகள் ஒதுங்குகின்றனர். சிலை அருகே புட்டுத்தோப்பு ரோட்டை ஆக்கிரமித்து, கடைகளுக்கு முன் வாகனங்களை நிறுத்துகின்றனர். புட்டுத்தோப்பு ரோடு முழுவதும் கண்டபடி வாகனங்களை நிறுத்துகின்றனர். ஆட்டோக்கள் தொல்லை இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தீர்வு: கிராஸ் ரோடு சந்திப்பில் அனுமதிக்கப்பட்ட பஸ் ஸ்டாப்களில் பஸ்களை நிறுத்த வேண்டும். விதி மீறும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார டிரான்ஸ்பார்மரை இடமாற்ற வேண்டும். இச்சந்திப்பு அருகே மூன்று ரோடுகளிலும் பிளாட்பார ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சிவானந்தா ரோடு பஸ் ஸ்டாப் அருகே உள்ள குப்பைத்தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.








      Dinamalar
      Follow us