sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும்: கலெக்டர்

/

மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும்: கலெக்டர்

மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும்: கலெக்டர்

மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும்: கலெக்டர்


ADDED : செப் 07, 2011 02:47 AM

Google News

ADDED : செப் 07, 2011 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : ''மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும்,'' என, ஆசிரியர்களை கலெக்டர் சகாயம் கேட்டு கொண்டார்.

மதுரை பசுமலை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் ஆசிரியர் தின விழாவில் கலெக்டர் பேசியதாவது: ஆசிரியர் பணி புனிதமானது. மாணவர்களிடம் அனைத்து திறமைகளும் உள்ளன. அவர்களின் ஆற்றல், அறிவை உயர்வடையச் செய்ய ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். நாட்டில் லஞ்சம் இன்று புரையோடி விட்டது. தேச முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள லஞ்சம், ஊழல், இல்லாத சமூகத்தை உருவாக்க மாணவர்கள் பாடுபட வேண்டும். அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் வழியில் படிப்பவர்கள், தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டும். ஆர்வமும் தன்னம்பிக்கையும் இருந்தால், ஆற்றலும், அறிவும் தேடிவரும். அதிகம் படிக்க வேண்டும். சோதனைகள், எதிர்ப்பு, வறுமையை போராடி வென்றால் லட்சியவாதி ஆகலாம். சமூகம், தேசத்திற்காக பாடுபடுபவர் வரலாற்றில் இடம் பெறுவர். மாணவர்களை ஆசிரியர்கள் பட்டை தீட்ட வேண்டும், என்றார்.

கல்லூரி துணை தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், பொருளாளர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். முதல்வர் நேரு வரவேற்றார். பேராசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us