/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாய் மணல் திருட்டு குடிநீருக்கு மக்கள் தவிப்பு
/
கண்மாய் மணல் திருட்டு குடிநீருக்கு மக்கள் தவிப்பு
ADDED : செப் 13, 2011 12:37 AM
மதுரை : மதுரை மாவட்டம் நெடுமதுரை கண்மாயில் நடைபெறும் மணல் திருட்டால், கிராமமக்கள் குடிநீருக்கு அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.இக்கண்மாயில் 9 மாதங்களாக டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் மணல் திருடப்படுகிறது.
வருவாய் அதிகாரிகளிடம் புகார் செய்தும், கடத்தல் வண்டிகளை பிடித்துக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் நெடுமதுரை கிராமகுடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் தெய்வேந்திரன்.
அவர் கூறியதாவது:இக்கண்மாயில் மணல் திருடி மிக ஆழமான பள்ளங்களை ஏற்படுத்திவிடுகின்றனர். இதனால் கண்மாய் நீர் மடைக்கு செல்வது இல்லை. கண்மாயில் மணல் அள்ள அரசு அனுமதித்துள்ளதா? என தகவல் உரிமை சட்டப்படி தகவல் கோரி னோம். அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என பதில் அளிக்கப்பட்டது. ஆனால் திருட்டு தொடர்ந்து நடக்கிறது. இங்கு மணல் திருட்டை தடுத்து கண்மாயை காக்க வருவாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய் தண்ணீர் சுவையாக இருக்கும் என்பதால் இதை குடிநீராக பயன்படுத்தி வந்தோம். மணல் திருட்டால் நிலத்தடிநீர் குறைந்து விட்டது. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.