sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் பிடிபட்ட அரிய நட்சத்திர ஆமை

/

மதுரையில் பிடிபட்ட அரிய நட்சத்திர ஆமை

மதுரையில் பிடிபட்ட அரிய நட்சத்திர ஆமை

மதுரையில் பிடிபட்ட அரிய நட்சத்திர ஆமை


ADDED : செப் 13, 2011 12:37 AM

Google News

ADDED : செப் 13, 2011 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் மாணவர்கள் கையில் சிக்கிய அரியவகை நட்சத்திர ஆமை வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை செல்லூரை சேர்ந்தவர் கோபிசங்கர். அமெரிக்கன் கல்லூரி மாணவர். இவர் தன்னிடம் அரிய வகை நட்சத்திர ஆமை உள்ளதாக வனஉயிரின அலுவலர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். வனஅதிகாரிகள் கோபிசங்கரிடம் இருந்து ஆமையை பெற்றனர்.

மாணவர் கோபிசங்கர் கூறுகையில், ''நான் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வருகிறேன். மதுரை ரயில்வே சந்திப்பு பகுதிக்கு சென்றபோது சில மாணவர்கள் பாலிதீன் பையில் நட்சத்திர ஆமையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். நான் ஆமைகளை பற்றி படித்திருந்ததால் அந்த ஆமை அரிதானது என அறிந்தேன். அதை அவர்களிடம் இருந்து பெற்று, மதுரை வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தேன். வெளிநாடுகளில் இதன் குறைந்தபட்ச மதிப்பு ரூ. 23 ஆயிரம்,'' என்றார். வனஅதிகாரி ராஜ்குமார் கூறியதாவது: நட்சத்திர ஆமை அரிதானதுதான். இரண்டு வயதுள்ள இந்த ஆமையை, வெளிநாடுகளில் 'வாஸ்து'க்காக வைத்திருப்பர். இது நிலப்பரப்பில் மணற்பாங்கான இடத்தில் வளரும் தன்மை உடையது. அழுகிய பொருட்களை உண்ணும். இதை யாராவது எடுத்து வரும்போது தவறவிட்டு இருக்கலாம்,'' என்றார்.








      Dinamalar
      Follow us