/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஸ்களை சேதப்படுத்திய 100 பேர் மதுரையில் கைது
/
பஸ்களை சேதப்படுத்திய 100 பேர் மதுரையில் கைது
ADDED : செப் 13, 2011 01:01 AM
மதுரை: பரமக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மதுரை மாவட்டத்தில் பஸ்களை சேதப்படுத்தியதாக 11 வழக்குகள் பதிவு செய்து, 96 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று காலை சிந்தாமணியில் அரசு டவுன் பஸ்சை சேதப்படுத்திய சூர்யா, பாலசுப்பிரமணி மற்றும் பாத்திமா கல்லூரி அருகே இரு பஸ்களை சேதப்படுத்திய சிவா, முத்து கைது செய்யப்பட்டனர். சிந்தாமணி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஏ.டி.ஜி.பி., விசாரணை : துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, நேற்று முன் தினம் இரவு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் மதுரை வந்தார். நேற்று காலை அரசு ஆஸ்பத்திரிக்கு வருவார் என போலீசாரும், பத்திரிகையாளர்களும் காத்திருந்தனர். ஆனால் அவர் எஸ்.பி., அலுவலகம் சென்று, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அக்.,30 தேவர் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்தார். பின், கலவரத்தில் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் சென்னை போலீஸ் இணை கமிஷனர் செந்தில்வேலன், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.