/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென்மாவட்ட நிலைமை கட்டுக்குள் உள்ளது ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் பேட்டி
/
தென்மாவட்ட நிலைமை கட்டுக்குள் உள்ளது ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் பேட்டி
தென்மாவட்ட நிலைமை கட்டுக்குள் உள்ளது ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் பேட்டி
தென்மாவட்ட நிலைமை கட்டுக்குள் உள்ளது ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் பேட்டி
ADDED : செப் 13, 2011 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : 'தென்மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது' என அத்துறை ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது :கலவரக்காரர்கள் போலீசாரை தாக்கினர்.
அப்போதும் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால், கலவரக்காரர்கள் எல்லை மீற, நிலைமை மோசமானது. வாகனங்களை கொளுத்தினர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது, என்றார். அவரிடம், 'அரசியல்வாதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தொய்வு உள்ளதாக கூறப்படுகிறதே, துப்பாக்கிச்சூட்டில் எவ்வளவு பேர் காயமடைந்தனர்' என்று நிருபர்கள் கேட்டதற்கு பதிலளிக்காமல் புறப்பட்டு சென்றார்.