sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பெட்ரோல் விலை உயர்வு; மக்கள் கொதிப்பு

/

பெட்ரோல் விலை உயர்வு; மக்கள் கொதிப்பு

பெட்ரோல் விலை உயர்வு; மக்கள் கொதிப்பு

பெட்ரோல் விலை உயர்வு; மக்கள் கொதிப்பு


ADDED : செப் 17, 2011 03:11 AM

Google News

ADDED : செப் 17, 2011 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 'மத்திய அரசின் பெட்ரோல் விலை ஏற்றம் ஆண்டவனுக்கே அடுக்காது,' என, மதுரை வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர்.

காலண்டரில் தேதி மாறுவதை போல, இந்தியாவில் பெட்ரோல் விலை மாறிவருகிறது. நேற்று முன்தினம் பெட்ரோல் விலை 3 ரூபாய் 32 காசு உயர்ந்தது குறித்து, மதுரை வாகன ஓட்டிகளின் குமுறல்கள் சில:நாகராஜன்(ரயில்வே ஊழியர்): கார், பைக் வைத்திருப்பதால், பெட்ரோல் பயன்பாடு எனக்கு அதிகம். முன்பு, 30, 50 காசுகள் தான் உயர்த்துவர். இப்போது தடாலடியாக 3 ரூபாய் கணக்கில் உயர்த்துகின்றனர். இனி வாகனம் ஓட்டுவதை மறந்துவிடலாம்.சங்கர்(மருந்து விற்பனையாளர்):பைக்கில் தினமும் மதுரை முழுக்க சுற்றி வருகிறேன். ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை உயர்வதால், விழிபிதுங்குகிறது. கட்டாயத்தை சாதகமாக்கி, விலை ஏற்றினால் ஆண்டவனுக்கே அடுக்காது!முகமது பிர்தவுஸ்(வியாபாரி):நாள் ஒன்றிக்கு ஒரு லிட்டர் செலவாகிறது. இதற்காக மாதக்கணக்கில் குறிப்பிட்டத்தொகை செலவாகிறது. குடும்ப பட்ஜெட்டை பாதிக்கிறது. நீலமேகம்(ஆட்டோ டிரைவர்):விலை ஏறும் போது, பொதுமக்கள் தலையில் சுமர்த்த வேண்டியுள்ளது. இதற்கு மேல் கட்டணம் வசூலித்தால் யாரும் ஆட்டோவில் வரமாட்டார்கள். விலை ஏற்றத்தை நினைத்தால் தலைசுற்றுகிறது.








      Dinamalar
      Follow us