sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் "தீபாவளி' திருடர்களிடம் இருந்து கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க என்ன வழி?

/

மதுரையில் "தீபாவளி' திருடர்களிடம் இருந்து கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க என்ன வழி?

மதுரையில் "தீபாவளி' திருடர்களிடம் இருந்து கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க என்ன வழி?

மதுரையில் "தீபாவளி' திருடர்களிடம் இருந்து கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க என்ன வழி?


ADDED : செப் 19, 2011 12:55 AM

Google News

ADDED : செப் 19, 2011 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : அக்டோபர் 26ம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு 'கவுண்ட் டவுன்' துவங்கிய நிலையில், இப்போதே பொருட்களை வாங்க மதுரையில் கூட்டம் அலைமோதுகிறது.

பண்டிகை நெருங்கும்போது, கூட்டம் அதிகமாகும் என்பதால், பல நூதன திருடர்கள் கைவரிசை காட்டுவர். இதை தவிர்க்க, நெரிசலில் சிக்காமல், இப்போதே பொருட்களை வாங்குவது புத்திசாலித்தனம்.தீபாவளி நெருங்க, நகைதிருட்டு, பிக்பாக்கெட், பொருட்கள், சேலை திருடுவது நடக்கும். கூட்டத்தை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவது போல் பிக்பாக்கெட் அடிப்பது, சில்லரையை கீழே போட்டு, கவனத்தை திசை திருப்பி திருடுவது, வாங்கிய பொருட்களை அருகில் வைத்துவிட்டு,

மற்றொரு பொருட்களை வாங்கும் சமயத்தில் திருடுவது, பிஸ்கட்டை தண்ணீரில் நனைத்து சட்டையில் தடவி, 'சார்... பின்னால அசிங்கமாக இருக்கு' என்று உதவுவது போல் திருடுவது என பல நூதன முறைகள் இந்த தீபாவளி பஜாரிலும் நடக்க வாய்ப்புள்ளது.



ஜவுளி கடைகளில் கூட்டத்தை பயன்படுத்தி, சேலை வாங்குவது போல் பாவாடை பாக்கெட்டுகளில் பதுக்குவது, நகை கடைகளில் செயின், வளையல்களை திருடுவது நடக்கும். தவிர, ஜவுளி கடையில் வாங்கிய துணிகளை மொத்தமாக ஒரு இடத்தில் யாராவது ஒருவர் பாதுகாக்கும் இடத்திற்கு வரும் பெண் திருடர்கள், 'அந்த கலர் சேலை கட்டிய அக்கா உங்களை அங்கே வரச்சொன்னாங்க. போங்க... நான் பையை பாதுகாப்பா பார்த்துக்கிறேன்' என்று திருடுவதும் நடக்கும். மேலும், சிலர் பிளாட்பாரத்தில் கடைகளை விரித்து பொருட்களை விற்பது போல் 'நடித்து' திருடுகின்றனர். இக்குற்றங்கள் எல்லாம் சில ஆண்டுகளாக புது திருடர்களால் நடத்தப்படுகிறது. திருட்டிலிருந்து தப்பிக்க 'டிப்ஸ்' : நிம்மதியாக தீபாவளி பொருட்களை வாங்க, காலை முதல் மாலைக்குள் பஜாருக்கு செல்வது நல்லது. காரணம் இருட்டும் திருட்டுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே வாங்கிய பொருட்களை அருகில் உள்ள உறவினர் அல்லது நண்பர் வீடு, கடைகளில் வைத்துவிட்டு, மீண்டும் ஒரு 'ரவுண்ட்' வரலாம். நகைகளை அணிந்து செல்லக்

கூடாது. பணத்தை பர்ஸில் வைக்காமல், சட்டை உள்பாக்கெட்டில் வைக்கவும். குழந்தைகளுக்கு நகைகளை போட்டு அழைத்துச் செல்லக்கூடாது. தீபாவளி வரை காத்திருக்காமல் இப்போதே கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவது புத்திசாலித்தனம்.



போலீஸ் கூறியதாவது : தீபாவளி பண்டிகைக்கு இரு வாரங்களுக்கு முன்பே, தெற்குமாசிவீதியில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படும். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பஜார் கண்காணிக்கப்படும். முன்னெச்சரிக்கையாக திருடர்கள் கைது செய்யப்படுவர். குற்றப்பிரிவு போலீசார் 'மப்டி'யில் ரோந்து வருவர். குற்றச்சம்பவம் நடந்தால் உடனே தகுந்த அடையாளங்களுடன் '100'க்கு தகவல் தெரிவிக்கலாம், என்றனர்.








      Dinamalar
      Follow us