/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துப்பாக்கிச்சூடு நடத்திய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
/
துப்பாக்கிச்சூடு நடத்திய இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
ADDED : செப் 19, 2011 12:55 AM
மதுரை : மதுரை சிந்தாமணி சந்திப்பில் துப்பாக்கிச்சூடு நடத்திய அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், நெல்லைக்கு இடமாற்றப்பட்டார்.
செப்.,11 இமானுவேல்சேகரன் நினைவு தினத்தன்று, சிந்தாமணி சந்திப்பில் பாட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் கைத்துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்தனர். அவரை இடமாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அவரை நெல்லைக்கு இடமாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டார். இதேபோல், அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சர்க்கரை, கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் திண்டுக்கல் மாவட்டத்திற்கும், பேரையூர் இன்ஸ்பெக்டர் இளங்கோ விருதுநகர் மாவட்டத்திற்கும் இடமாற்றப்பட்டனர். எஸ்.பி., அலுவலகத்தில் கேட்டபோது, ''இவர்கள் இடமாற்ற உத்தரவு ஒருமாதத்திற்கு முன்பே வெளியிடப்பட்டது. இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு போன்ற காரணங்களால் இவர்கள் தொடர்ந்து பணியாற்றினர். கஜேந்திரன் இடமாற்றத்திற்கும், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் சம்பந்தமில்லை,'' என்றனர்.