நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேடகம் : திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடந்தன.
கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் பொன்பட்டினத்தார், பேராசிரியர்கள் கு.ராமர், அ.சதீஷ் நடுவராக இருந்தனர். முதல் பரிசை மன்னர் கல்லூரி ஜெயராமனும், பாத்திமா கல்லூரி நான்சியும் பெற்றனர். காமராஜர் பல்கலை ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்
வரன் பரிசுகளை வழங்கினார். முதல்வர் ராமமூர்த்தி சான்றிதழ்களை வழங்கினர். துணைமுதல்வர் ரா.ஜெயபாலன், பேராசிரியர் டி.வெங்கடேசன் கலந்து கொண்டனர். பேராசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.