நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி,:கொட்டாம்பட்டி ஒன்றியம் சென்னகரம்பட்டியில் மண் பரிசோதனை முகாம் நடந்தது.கிராம ஏற்புதிட்டத்தின் கீழ் நடந்த இம்முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் செல்வபாண்டி தலைமை வகித்தார்.
உதவி இயக்குனர்செல்வன் முன்னிலை வகித்தார். விவசாய நிலங்களில் 100 மண் மாதிரிகள், 10 தண்ணீர் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்பட்டு அதற்கான மண்வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி செய்ய நடவு இயந்திரக்கருவி அறிமுகப்படுத்தப்பட்டு, அதை உபயோகிப்பது குறித்தும் விளக்கப்பட்டது.
வேளாண்மை அலுவலர்கள் நாராயணசாமி, மதுரைசாமி, செந்தில்குமார், துணை வேளாண்மை அலுவலர் ஆதீஸ்வரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரபு, சந்திரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.