/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சென்னைக்கு கூடுதல் ரயில் தினமும் இயக்க கோரிக்கை
/
சென்னைக்கு கூடுதல் ரயில் தினமும் இயக்க கோரிக்கை
ADDED : செப் 19, 2011 12:59 AM
மதுரை : மதுரை-சென்னை இடையே பயணிகள் நெரிசலை தவிர்க்க தினமும் இரவில் முன்பதிவு இல்லாத விரைவு ரயிலை இயக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடப்பட்டது.
ரயில்வே கோட்ட உபயோகிப்பாளர் ஆலோசனை குழு உறுப்பினர் சையது பாபு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: மதுரை-சென்னை இடையே இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது.
தீபாவளி, நவராத்திரி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் டிக்கட் முன்பதிவு முடிந்து விட்டது. அந்தளவுக்கு பயணிகள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். நெரிசலை தவிர்க்க தினமும் மதுரை-சென்னை இடையே
இரவில் முன்பதிவு இல்லாத விரைவு ரயிலை இயக்க வேண்டும். நாகர்கோவில்-பெங்களூரு ரயிலில் இடவசதியில்லாததால், மதுரை பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மதுரை-பெங்களூருவுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். ஜோத்பூர்-சென்னை ரயிலை மதுரை வரை நீடித்தால், தென் மாவட்ட பயணிகள் வடமாநிலங்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும். திண்டுக்கல்-பழநி அகல ரயில் பாதை முடியும்நிலையில் உள்ளதால், தென்மாவட்டங்களில் இருந்து பழநி வரை ரயில்களை இயக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.