/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அழகிரியை சந்தித்த தி.மு.க., வேட்பாளர்கள்
/
அழகிரியை சந்தித்த தி.மு.க., வேட்பாளர்கள்
ADDED : செப் 25, 2011 03:30 AM
மதுரை:உள்ளாட்சி தேர்தலுக்கான, மதுரை மாவட்ட தி.மு.க., வேட்பாளர்கள்,
அழகிரியை அவரது வீட்டில் சந்தித்தனர். நகராட்சி, பேரூராட்சி வாரியாக
வேட்பாளர்களை அழைத்து, வாழ்த்து கூறினார். மதுரை மாநகராட்சி மேயர்
வேட்பாளர் பாக்கியநாதன் வர தாமதம் ஆனதால், காத்திருந்த அழகிரி, 'வேலை
இருப்பதாக,' கூறி, காரில் கிளம்பினார். வேட்பாளர் பாக்கியநாதன்
கூறுகையில்,''வேட்பாளர் அறிவிப்பு வந்ததும் அழகிரியை சந்தித்தேன்.
தெற்குவாசலில் 1.30 மணி நேரம் 'டிராபிக்'கில் சிக்கியதால் நேரத்திற்கு
வரமுடியவில்லை. கருணாநிதியிடம் ஆசிபெற்ற பின், அழகிரியை சந்தித்து
ஆசிபெறுவேன்,'' என்றார்.
நான்எதுக்கு இருக்கேன்?: நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான வேட்பாளர்களை கட்சி மேலிடம் அறிவித்தது.
கவுன்சிலர் வேட்பாளர்களை உள்ளூர் நிர்வாகிகளே தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டு
இருந்தது. அழகிரியை சந்திக்க வந்த இடத்தில், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்
உக்கிரபாண்டி 'லிஸ்ட்' ஒன்றை கொண்டுவந்திருந்தார். அதை பார்த்த மாவட்ட
செயலாளர் மூர்த்தி, ''நீயா எதையும் முடிவு செய்யாதே, நான் எதுக்கு
இருக்கேன். நீ முதல்ல கிளம்பு; மன்னன் ஒரு சீட்டு கேட்குகிறார்,
எம்.எல்.ராஜ் ஒரு சீட் கேட்குறான், நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்,' என,
கோபமானார். மறுபேச்சு பேசாமல் உக்கிரபாண்டி அங்கிருந்து கிளம்பினார்.

