sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வீடு தேடி வரும் இலவச திட்டங்கள் :அ.தி.மு.க., வேட்பாளர் குமார் உறுதி

/

வீடு தேடி வரும் இலவச திட்டங்கள் :அ.தி.மு.க., வேட்பாளர் குமார் உறுதி

வீடு தேடி வரும் இலவச திட்டங்கள் :அ.தி.மு.க., வேட்பாளர் குமார் உறுதி

வீடு தேடி வரும் இலவச திட்டங்கள் :அ.தி.மு.க., வேட்பாளர் குமார் உறுதி


ADDED : அக் 02, 2011 12:58 AM

Google News

ADDED : அக் 02, 2011 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''மதுரை மாநகராட்சி 72வது வார்டில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள அரசு இலவச திட்டங்கள் வீடு தேடி வர பாடுபடுவேன்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் பி.குமார், 29, உறுதி கூறினார்.

அ.தி.மு.க., தெற்கு மூன்றாம் பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் குமார் கூறியதாவது: வார்டிலுள்ள 25 தெருக்களிலும் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் சப்ளை செய்வேன்.

கிருஷ்ணாபுரம் 2வது தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ரோட்டோர மார்க்கெட்டை, அருகிலுள்ள மாநகராட்சி கட்டடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்காமல் செல்ல அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்படும். கொசு தொல்லையை ஒழிக்க தினமும் மருந்து அடிக்கப்படும். மகாலிங்கசேர்வை சந்தில் அமைந்துள்ள அனுமன் கோயிலில் அன்னதானம் திட்டம் துவங்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும். அங்கு முகப்பு தோரணம் அமைக்கப்படும். பள்ளிகள் நிறைந்த பழையகுயவர்பாளையம் ரோட்டில் நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக்ஸ் பதிக்கப்படும். வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த காமராஜர் சாலை புதுபொலிவு பெற செய்யப்படும். அனைத்து இலவச திட்டங்களும் வீடுகளுக்கு தேடி வர நடவடிக்கை எடுக்கப்படும். தடையில்லா மின்சாரத்திற்கு வழி செய்யப்படும், என்றார்.








      Dinamalar
      Follow us