sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வில்லூர் - ராமநாதபுரம் சாலை காங்., வேட்பாளர் இருளாயி உறுதி

/

வில்லூர் - ராமநாதபுரம் சாலை காங்., வேட்பாளர் இருளாயி உறுதி

வில்லூர் - ராமநாதபுரம் சாலை காங்., வேட்பாளர் இருளாயி உறுதி

வில்லூர் - ராமநாதபுரம் சாலை காங்., வேட்பாளர் இருளாயி உறுதி


ADDED : அக் 05, 2011 12:46 AM

Google News

ADDED : அக் 05, 2011 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிக்குடி : ''கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டில் வில்லார்-ராமநாதபுரம் இணைப்பு சாலை அமைக்கப்படும்,'' என ஒன்றிய கவுன்சிலர் காங்., வேட்பாளர் கா.இருளாயி உறுதி கூறினார்.

அவர் கூறியதாவது: வில்லூர் ஊராட்சி முதலாவது வார்டில் ரூ.பல லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயனற்றுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் வைகை குடிநீரை ஏற்றி சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். செண்பகத்து ஊரணியை சுத்தப்படுத்தி சுற்றுச்சுவர் கட்டி படிக்கட்டுகள் அமைக்கப்படும். அழகாத்திரி செட்டியார், பாப்பா ஊரணிகளில் கூடுதல் படிக்கட்டுகள், கோட்டாராமன் குளத்தில் குளிக்க வசதியாக படிக்கட்டுகள் அமைக்கப்படும். வில்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியை சித்தன் எம்.பி., மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த உதவினார். பள்ளி கலையரங்கம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார். ஆனால் உள்ளாட்சியில் பொறுப்பில் இருந்தவர்கள் அதை முறையாக பயன்படுத்தாததால் திரும்பப் பெறப்பட்டு விட்டது. தற்போது மாணிக்கதாகூர் எம்.பி.,யிடம் கூறி கலையரங்கம் கட்டப்படும். பள்ளிகளுக்கு சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தெற்குத்தெருவில் மகளிருக்கு ஒருங்கிணைந்த கழிப்பறை, குளியலறை கட்டப்படும். அடிகுழாய்கள் பழுது பார்க்கப்படும். ஆதிதிராவிட மக்களுக்கு ஒருங்கிணைந்த சுடுகாடு அமைக்கப்படும் வில்லூர்-ஒவரி சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், என்றார்.








      Dinamalar
      Follow us