sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாகைகுளம் கண்மாயில் மரங்களை வெட்ட தடை

/

வாகைகுளம் கண்மாயில் மரங்களை வெட்ட தடை

வாகைகுளம் கண்மாயில் மரங்களை வெட்ட தடை

வாகைகுளம் கண்மாயில் மரங்களை வெட்ட தடை


ADDED : அக் 05, 2011 12:49 AM

Google News

ADDED : அக் 05, 2011 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : நெல்லை மாவட்டம் வாகைகுளம் கண்மாயில் பறவைகள் தங்க வசதியாக கருவேல மரங்களை வெட்டுவதற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.

நெல்லை மாவட்டம் அம்பை தாமிரபரணி விவசாயிகள் நல சங்க செயலாளர் பாபநாசம் தாக்கல் செய்த பொது நல வழக்கு: அம்பை தாலுகாவில் வாகைகுளம் கண்மாய் உள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு அருகில் உள்ளது. கண்மாயில் கருவேல மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து தங்கும். 85 வகையை சேர்ந்த பத்தாயிரம் பறவைகள் வரை வரும். தற்போது மரங்களை வெட்டுவதால், அவைகள் பாதிப்புக்குள்ளாகும். எனவே மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். பறவைகள் வந்து தங்கிச்செல்ல ஏதுவாக மரங்களை நட உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. அவசர வழக்காக இதை நீதிபதிகள் சி.எஸ்.கர்ணன், எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அழகுமணி, மலைக்கனி ஆஜராயினர். நீதிபதிகள், மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்தனர். விசாரணையை அக்., 10க்கு தள்ளிவைத்தனர்.








      Dinamalar
      Follow us